உலகின் சிறந்த கூலிக்கொலைகாரனை கொல்ல முயலும் இளைஞர்கள் குழு! - கில்லிங் கன்தர்
கில்லிங் கன்தர் 2017 |
கில்லிங் கன்தர்
இயக்கம் தரன் கில்லம்
ஒளிப்பதிவு பிளாக் மெக்லர்
இசை டினோ மெனகின்
ராபர்ட் கன்தர் பெனடிக் என்பவர், புகழ்பெற்ற கூலிக்கொலைகாரர். ஆஸ்லே என்று முன்னாள் கொலைகாரரிடம் வேலைக்கு சேர்ந்து பின்னாளில் தனியாகவே தொழில்புரியத் தொடங்கி ஒட்டுமொத்த கிரைம் உலகில் தனது குற்றத்தடத்தை பதித்தவர்.
அவல நகைச்சுவை படத்தின் சிறப்பு |
இவரை கொலை செய்ய பிளாக் என்ற இளம் கூலிக்கொலைகாரனின் தலைமையில் ஒரு டீம் உருவாகிறது. இவர்களில் பலரும் கன்தரின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள்.
பிளாக், இதற்கான திட்டத்தை வகுத்தாலும், அவனுடைய குழுவினருக்கு இதன் பாதிப்பும், விளைவுகளும் முழுமையாக தெரிவதில்லை. இவர்களின் கோக்குமாக்கு மாக்கு காமெடிகளோடு கூடுதல் காமெடியாக இவர்களின் ஆபரேஷன் கன்தர் என்ற கொலைத்திட்டத்தை பிளாக் வீடியோ குழு மூலம் பதிவு செய்கிறான்.
பிளாக் குழுவின் முக்கியமான பலவீனம், கன்தார் யார், அவன் எப்படியிருப்பான் என்றே அவர்களுக்கு தெரியாது. அடுத்து, அவன் எங்கிருப்பான், எங்கு அவனது கார்ப்பரேட் ஆபீஸ் உள்ளது ஆகிய சமாச்சாரங்களும் அவனுக்கு தெரியாது. இந்த லட்சணத்தில் இந்தக் குழு எப்படி கன்தரை கண்டுபிடித்து கொல்கிறது என்பதுதான கதை.
படம் முழுக்க அவல நகைச்சுவை காட்சிகள் ஏகத்தும் உள்ளன. நிறைய இடங்களை நீங்கள் சிரிக்காமல் கடக்கவே முடியாது. கதாபாத்திரங்களும் அப்படி அமைக்கப்பட்டுள்ளன. மனநிலை பாதித்த ரஷ்ய அண்ணன், தங்கை, சீசாவில் பாம்பின் விஷம் வைத்துக்கொண்டு அலையும் சீனன், இரான் பெண், அவளது பாசத் தந்தை, மனிதர்களை தவிர அனைவரையும் ஹேக் செய்யும் டெக்கி நபர், தீவிரவாத தாக்குதலில் ஒரு கரத்தை இழந்து இரும்புக்கரத்தை பொருத்திக்கொண்ட தீவிரவாதி ஒருவன் என பிளாக்கின் ஒட்டுமொத்த குழுவே நவரசங்கள் நிரம்பிய குழு.
வன்முறையும் காமெடியும் படத்தில் நிறைந்துள்ளன. |
இயக்குநர் பிளாக் என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அர்னால்டு ஸ்வார்ஸ்நெகர்தான் வில்லன் கன்தர். குறைவான காட்சிகளிலும் நிறைவாக நடித்துள்ளார். படம் முடிந்துவிட்டதாக தோன்றும் இடத்தில் வரும் ட்விஸ்ட் நன்றாக இருக்கிறது.
படம் முழுக்க டாகுமெண்ட்ரியை எடுக்கும் குழுவினரின் கேமராவின் பார்வையிலேயே அனைத்தும் நடக்கிறது. இதனால் படம் மிகவும் யதார்த்தமாக வந்திருக்கிறது.
நியூஜென் காமெடி படம் !
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக