மண்ணீரலை கல்லீரலாக பயன்படுத்த முடியும்! - ஆராய்ச்சித் தகவல் புதுசு




இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் ...
கல்லீரல் - போல்ட்ஸ்கை தமிழ்



கல்லீரலுக்கு மாற்றாக மண்ணீரல்!

உடலிலுள்ள பல்வேறு உறுப்புகளுக்கு மாற்று உறுப்புகள் தேடுவது கடினமாகி வருகிறது. மருத்துவ அறிவியல் வசதிகள் முன்னேறினாலும், கொடையாளி தன் உறுப்பை தானமாக கொடுத்தால் மட்டுமே நோயாளிக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்குப் பயன்படுத்த முடியும். இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எலிக்கு கல்லீரக்குப் பதிலாக மண்ணீரலைப் பொறுத்தி வெற்றி கண்டுள்ளனர். இதன் காரணமாக, மனிதர்களுக்கும் செயலிழந்த கல்லீரலை அகற்றிவிட்டு, அவர்களது உடலிலுள்ள மண்ணீரலை மாற்று உறுப்பாகப் பயன்படுத்தும் சாத்தியம் உள்ளது. சீனாவிலுள்ள நான்ஜியாங்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லெய் டாங் தலைமையிலான குழுவினர், எலி மீது மண்ணீரல் சோதனை செய்து வென்றுள்ளனர்.

எலியின் உடலில் பெரும்பகுதி கல்லீரல், அகற்றிவிட்டு, மண்ணீரலைப் பொறுத்தியுள்ளனர். இதில் கல்லீரல் திசுக்களை செலுத்தி, வளரச்செய்தனர். எட்டு வாரங்களுக்குப் பிறகு எலியின் உடலில் பொருத்தப்பட்ட மண்ணீரலில் கல்லீரலில் உள்ளது போன்ற ரத்தக்குழாய்கள் உருவாகியிருந்தன. இச்சோதனையைப் பற்றி எதிர்மறையாக இரு கருத்துகள் கூறப்படுகின்றன. ”ரத்தத்திலுள்ள நச்சை கல்லீரல் நீக்குகிறது இப்பணியை அதற்கு பதிலாக மண்ணீரலால் நேரடியாக செய்யமுடியாது” என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக ஆய்வாளர் ஜியோஃப் மெக்காகன். ”உடலில் கல்லீரல் சேதப்பட்டிருக்கிறது என்றால் மண்ணீரலும் சேதப்பட்டிருக்க அதிக வாய்ப்பு உண்டு. இந்நிலையில் அதனை எப்படி கல்லீரலுக்கு மாற்றாக கருத முடியும்” என்கிறார் பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர் எரிக் லாகாஸே.  கல்லீரல் செயலிழப்பு அதிகரித்து வருகிற சூழலில் சீன ஆய்வாளர்களின் முயற்சி தவறானது என்று கூறிவிடமுடியாது என்பது உண்மை.  

தகவல்: நியூ சயின்டிஸ்ட் இதழ் 20.6.2020


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்