கந்துவட்டி பணத்தைக் கட்ட நாய்களை திருடி பிளாக்மெயில் செய்யும் கார் மெக்கானிக்! - கிட்டு உன்னாடு ஜாக்ரதா 2017
கிட்டு உன்னாடு ஜாக்ரதா
இயக்கம் வம்சி கிருஷ்ணா
சகோதரர்கள்
கதை ஸ்ரீகாந்த் விசா
ஒளிப்பதிவு பி.ராஜசேகர்
இசை அனுப் ரூபன்ஸ்
கார் காரேஜ் ஒன்றில் வேலை
பார்த்து வரும் கிட்டுவுக்கு, காதலியின் மூலமாக 25 லட்சம் ரூபாய் கொண்ட பேக் கிடைக்கிறது.
அடுத்தநாள் காதலியிடம் ஒப்படைக்கலாம் என்று இருக்கும்போது, கிட்டுவின் நண்பரன் பேராசைப்பட்டு
பணத்தை எடுத்துக்கொண்டு ஜம்ப் ஆகிறான். இதனால் காதலியின் நன்மதிப்பு கெடுமே என்று பயப்படும்
கிட்டு, கந்துவட்டி கும்பலிடம் அதிக வட்டிக்கு 25 லட்ச ரூபாயை வாங்கி காதலிக்கு கொடுக்கிறான்.
இதனால் வட்டிக்காரர்களிடம் பிடியில் சிக்கிக்கொள்கிறான். அசல் அடைப்பது வேறுபக்கம்.
வட்டி கட்டவே காசு சேர்க்க முடியவில்லை. இதனால் பணக்காரர்களின் நாய்களைக் கடத்தி பணம்
கேட்டு மிரட்டுகிறான். இதனால் கிடைக்கும் பணத்தை வைத்து வட்டி கட்டுகிறான். வட்டி கட்டுவது
தாமதமாக கந்துவட்டி கும்பல், கிட்டுவின் நண்பனை பிடித்து சென்றுவிடுகிறது. இதனால் ஒரே
கடத்தல். தேவையான பணத்தை வாங்கிவிட்டு கடனை அடைத்துவிடலாம் என்று திட்டமிடுகிறார்கள்.
அப்போது காதலியின் வீட்டு
நாயையே திருடுகிறான் கிட்டு. அதேசமயம் காதலியின் அப்பாவை பிளாக்மெயில் வில்லன் மிரட்டி
அவளை கடத்தி வந்துவிடுகிறான். காதலியை கிட்டு மீட்டானா, கந்து வட்டி கும்பல் அவனை கொலைவெறியுடன்
தேடிக்கொண்டிருக்க எப்படி தப்பித்தான், பணத்துடன் ஜம்ப் ஜிலானி என்று ஓடிய நண்பன் என்னவானான்
என்பதுதான் மீதிக்கதை.
ஆஹா
ராஜ்தருண் நடிக்க நிறைய
சந்தர்ப்பங்கள் உள்ளன. அதனை அவர் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். படம் முழுக்க
காமெடிதான். படத்தில் அர்பாஸ்கான் சீரியசான வில்லன் போல தோன்றினாலும், அவரையும் இறுதியில்
காமெடி செய்துவிடுகிறார்கள். நிதானமாக பின்சீட்டில் சாய்ந்து உட்கார்ந்து பார்க்கவேண்டிய
காமெடி படம். ஓ.ஹென்றியின் கதை படித்திருப்பீர்கள். தோழியின் நகை ஒன்றை வாங்கி அணிந்தவள்
அதை தொலைத்துவிடுவாள். இதனால் அந்த நகையை வாங்கிக்கொடுக்க கடினமாக உழைத்து தன் இளமையைத்
தொலைப்பாள். அதேதான் படத்திலும் நடக்கிறது. முக்கியமான திருப்பம் அது.
ஐயையோ
படம் ஜாலியாக நகர்வதால்
எந்த இடத்திலும் ஏதோ நடந்துவிடுமோ என்று பதற்றமே தோன்றாதுதான்.
ஜாலியான ஆள்தான் கிட்டு!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக