நாத்திகர்கள், பகுத்தறிவாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது! - ஜாவேத் அக்தர், பாடலாசிரியர்
மதம் என்பது வழக்கற்று போய்விட்டது!
ஜாவேத் அக்தர், பாடலாசிரியர்
முதல் இந்தியராக ரிச்சர்ட் டாகின்ஸ் விருது வென்றிருக்கிறீர்கள்?
இந்த விருது பகுத்தறிவாளர்களுக்கும், அறிவியலை நம்புபவர்களுக்கும் வழங்கப்படும் விருது
அல்லவா?
இந்த உலகில் ஆன்மிக நம்பிக்கை
இல்லாதவர்கள், பகுத்தறிவாளர்கள் என இரண்டு
தரப்பினருமே உண்டு. இவர்களின் எண்ணிக்கை மெல்ல உயர்ந்துவருகிறது. நான், எனக்கு நம்பிக்கையில்லாத
விஷயங்களை மக்களிடையே பகிர்ந்துகொள்கின்றேன். அவை அவர்கள் அமைதியாக ஏற்றுக்கொண்டு புன்னகைக்கின்றனர்.
இன்று இந்தியாவில் தாங்கள் நம்பும் உண்மைகளை சொல்ல பலரும் பயப்படுகின்றனர். காரணம்,
விமர்சனங்கள் மீதான பயம்தான்.
பொதுமுடக்க காலம் எப்படி இருந்தது?
கண்டாலாவில் உள்ள வீட்டில்தான்
இருக்கிறேன். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வெளியான பல்வேறு சினிமா மற்றும் டிவி தொடர்களை
பார்த்து வருகிறேன். முன்னர் கவிதை எழுத நேரமில்லை என்று வருந்திக்கொண்டிருந்தேன்.
இந்த காலம் அந்த வருத்தத்தை போக்கியுள்ளது. எனக்கு வருத்தம் ஏற்படுத்திய விஷயம், இடம்பெயர்
தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட நிலைமைதான். கையறு நிலையில் அவர்கள் பட்ட கஷ்டங்களை மறக்கவே
முடியாது.
உங்களுக்கு கொடுக்கப்பட்ட விருது விவரங்கள் வெளியான பிறகு,
அதைப் பற்றிய நிறைய தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. இதனை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
இவை அபத்தான, கவலைப்பட தேவையற்ற
விஷயங்களாகவே கருதுகிறேன். என்னை அவதூறு பேசுபவர்களுக்கு பிரச்னை, நான் பகுத்தறிவாளராக
இருப்பது சிக்கல் அல்ல. மதச்சார்பற்றவன் என்பதை அவர்கள் மறுக்கிறார்கள். இஸ்லாமில்
உள்ள பர்தா, விவகாரத்து விஷயங்களை நான் தீவிரமாக விமர்சித்து கண்டித்துள்ளேன். அப்போது
நான் ஆர்எஸ்எஸ் துதிபாடி என்று கூறுவார்கள். அதுவே இந்து மத மூடநம்பிக்கைகளை பற்றி
பேசினால் உடனே, என்னை முஸ்லீம் தீவிரவாதி, தேச துரோகி என்று தூற்றுவார்கள். எனது வாழ்க்கையின்
தொடக்கத்திலிருந்தே இந்த தூற்றுதல்களை நான் கண்டு வருகிறேன்.
கார்ல் மார்க்ஸ் மதம் என்பதை
ஓபியம் என்று கூறியிருக்கிறார். உங்கள் பார்வையில் மதம் எப்படி?
மதம் என்பது வழக்கற்று போன
ஒன்று. அதனை நாம் அருங்காட்சியகத்திலும் வரலாற்றிலும் பார்க்கலாம். பெற்றோர்களும் தங்கள்
குழந்தைக்கு வரலாற்றில் இருந்த ஒன்று என்றே
மதத்தைப் பற்றி கூறவேண்டும் என விரும்புகிறேன்.
இந்தியாடுடே
சுஹானி சிங்
கருத்துகள்
கருத்துரையிடுக