ரூல்ஸ் பேசி மகனை வெளியே துரத்த பார்க்கும் தந்தையும், சமூகத்திற்கு உதவும் மகனும்! - வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்
ஆதி பிலிம் ரிவ்யூ |
வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் 2013
இயக்கம் மெர்லாபா காந்தி
ஒளிப்பதிவு சோட்டா கே நாயுடு
இசை ரமணா கோகுலா
நூறு தவறுகளுக்கு மேல் குடும்பத்தில் உள்ளவர்களை மன்னிக்காத ரூல்ஸ் ராமானுஜமாக அப்பா இருக்க, அடுத்தவர்களுக்கு உதவுவதே முக்கியம், அதுதான் மனிதநேயம் என்று நினைக்கும் அவரின் மகனுக்குமான உறவு சார்ந்த பிரச்னைகள்தான் படக்கதை.
சந்தீப், தன் அண்ணனின் கல்யாணத்திற்காக பூ வாங்க செல்கிறார். அங்கு நடக்கும் அடிதடியில் ஒருவரைப் காப்பாற்ற போய் வீணாக மாட்டிக்கொள்ள கஷ்டப்பட்டு வீட்டுக்கு வரும்போது,பையில் பூவுக்கு பதில் நார்தான் இருக்கிறது. அப்போது சந்தீப்பிர் கிரைம்ரேட் 99ஆக கணக்கிடப்பட்டுவிட்டது. இதனால், அடுத்து அவர் எப்போது வேண்டுமானாலும் நூறு அடிக்கலாம் என குடும்பமே பதற்றத்தில் இருக்கிறது.
அப்போது வருகிறது மூத்த அண்ணனின் கல்யாணம். அதற்காக திருப்பதி போகும்போது, ஆஸ்துமா அம்மா பதற்றத்தில் கல்யாணத்திற்கான தாலிக்கொடியை வீட்டிலேயே மறந்து வைத்துவிடுகிறார். அதை எடுக்க சந்தீப் வீட்டுக்குச் செல்கிறார். அதிரடியாக அவர் எடுத்துச் செல்லும் ஆட்டோவில் நாயகி பிரார்த்தனா இருக்கிறார். அவரின் நச நச பேச்சுகளை சமாளித்து ரயில் நிலையம் வந்துவிடுகிறார். ஆனால் எப்போதும் போல, உணவு விற்கும் கடைக்காரர் ஒருவருடன் பயணி செய்யும் சண்டையில் இவர் தலையிட அந்த நேரத்தில் ரயில் போய்விடுகிறது. இதனால் அவர் ரயிலைப் பிடிக்க வேறு ரூட்டுகளைப் பிடிக்கிறார். எப்படி அவர் தன் குடும்பத்தை அடைந்தார், அண்ணன் கல்யாணம் பிரச்னையின்றி நடந்ததா என்பதுதான் கதை.
ஆஹா
படம் முழுக்க சப்தகிரி, தகுபோத்து ரமேஷ், ரகுல் ப்ரீத் சிங், பிரம்மாஜி என காமெடி திருவிழாவே நடத்தியிருக்கிறார்கள். நூறாவது தவறு செய்தால், சந்தீப் தனது சித்தப்பா போல வீட்டைவிட்டு வெளியேற அத்தனை வாய்ப்புகள் இருக்கும் நிலையில் காமெடி களைகட்டுகிறது. அதிலும் தகுபோத்து ரமேஷ் ஆட்டோவில் சந்தீப் ஏறியதும், காமெடி உச்சமடைகிறது. சந்தீப் உணர்ச்சிகரமான காட்சிகளிலும், காமெடியிலும் செஞ்சுரியே அடித்திருக்கிறார். படத்தின் பாத்திரங்கள் அனைத்துமே சற்று பேன்டசி தன்மையோடு உள்ளன. ரசிக்கவைப்பதாகவே இருக்கின்றன.
ஐயையோ
சந்தீப் ரயிலை எப்போதுதான் பிடிப்பாரோ ஒரு கட்டத்தில் அயர்ச்சியே உருவாகிறது.
காமெடி எக்ஸ்பிரஸ்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக