இடியாப்ப சிக்கல்களைக் கொண்ட நாட்டின் தலைவர்! - இம்ரான்கான்











Imran Khan warns Pakistan as coronavirus cases cross 2,800 - The Week
பாக். பிரதமர் இம்ரான்கான்/the week



இம்ரான்கான்

1992ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அணியை வழிநடத்தி உலக கோப்பை வெல்ல வழிவகுத்தவர். லாகூரில் உள்ள மிகச்சிறந்த புற்றுநோய் மருத்துவமனையைக் கட்டியவர்,  குழந்தைகள் படிப்பதற்கான பல்கலைக்கழகம் ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார். இவற்றையெல்லாம் செய்தபிறகு இருபது ஆண்டுகள் கழித்துதான் அரசியலில் காலடி எடுத்து வைத்தார். பாகிஸ்தான் தெரீக் இன்சாஃப் என்ற கட்சியைத் தொடங்கி இன்று பாகிஸ்தான் பிரதமராக இருக்கிறார்.

தங்களின் அண்டைநாடுகளான சீனாவைப் போல வசதியான நாடு அல்ல பாகிஸ்தான். வளைகுடா நாடுகளைப் போல சிறப்பான கட்டமைப்புகளையும் ஏற்படுத்த முடியாமல், அரசு தனக்கான செலவுகளுக்கே பிற நாடுகளிடம் கையேந்தும் நிலையில் உள்ளது. ஆனாலும் பாகிஸ்தான் இளைஞர்கள் 67 வயதான இம்ரான்கானை நம்பித்தான் வாக்களித்திருக்கிறார்கள். ராணுவம், மத அடிப்படைவாதிகளிடம் நட்புகொண்டிருக்கிறார் என்று பல்வேறு விமர்சனங்கள் இவரைச் சுற்றி வலம்வருகிறது. சரியான ஆலோசகர்கள் இல்லாமல் நிர்வாகம் செய்கிறார் என்று பலரும் புகார்களைச் சொல்லுகிறார்கள். ஏராளமான முரண்பாடுகளைக் கொண்ட நாட்டை அவர் ஆண்டுகொண்டிருக்கிறார். அவர் நினைத்தால்தான் தெற்காசியாவில் அமைதியை உருவாக்க முடியும் என்பதுதான் அவரது எதிர்ப்பாளர்களால் ஜீரணிக்க முடியாத உண்மை.

அஹ்மத் ரஷீத்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்