இத்தாலியின் அதிரடி அரசியல்வாதி - மேட்டியோ சால்வினி
இத்தாலி முன்னால் துணை பிரதமர் மேட்டியோ சால்வினி |
மேட்டியோ சால்வினி
இன்று இத்தாலியைச்சேர்ந்த
சால்வினி பற்றிதான் ஐரோப்பாவே பேசிக்கொண்டிருக்கிறது. அகதிகள் பிரச்னை, நிர்வாக செயல்பாடு
என அனைத்திலும் இவர் தனிரகம். தனது தேர்தல் பிரசாரங்களை அப்படியே ஃபேஸ்புக்கில் ஏற்றி
லைவாக தொண்டர்களை பின்தொடர வைத்தார். ஐரோப்பாவில் உள்ள மேல்குடிமக்கள் அதிக காலத்திற்கு
சால்வினியை தவிர்க்க முடியாது. ஐரோப்பிய யூனியன் அகதிகள் கொள்கையை அறிவிக்கும் முறையை
முதலில் விமர்சித்த அரசியல்வாதி இவர்தான். தேசியவாத கட்சியில் இருந்துகொண்டு வலதுசாரியான
ஃபைவ் ஸ்டார் இயக்கத்துடன் இணைந்து ஆட்சி அமைப்பது என சால்வினி தொடும் அனைத்துமே பலருக்கும்
திகைப்பான செயல்பாடாகவே இருக்கும்.
இத்தாலியின் இறையாண்மைக்காக
என்று சொல்லுவது முதல் அகதிகள் நாட்டில் வருவதற்கான கட்டுப்பாடு, ஆட்கடத்தல் தடுப்பு
சட்டங்கள், நடவடிக்கைகள் என பல்வேறு விஷயங்களில் அடுக்கடுக்காக அதிரடி காட்டுகிறார்.
டைம்
ஸ்டீவ் பன்னோன்
கருத்துகள்
கருத்துரையிடுக