உறுப்புகளை திருடும் சைக்கோ கொலைகாரனை துணிச்சலாக எதிர்கொள்ளும் டிவி நிருபர்! - அனசுயா
அனசுயா 2007
இயக்கம், தயாரிப்பு: ரவிபாபு
ஒளிப்பதிவுL\jj[l
இசை [[[
என்டிவியில் பணிபுரியும் அனசுயா, சைக்கோ கொலைகாரனை எப்படி தேடிப்பிடித்து அவன் கொலைகளைத் தடுக்கிறாள் என்பதுதான் கதை.
நகரில் திடீரென பலர் கொல்லப்படுகின்றனர். அவர்களின் உடலில் ஒவ்வொரு உறுப்பு வெட்டப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது. இறந்தவர்களின் உடலின் அருகே ரோஜாப்பூ தவறாமல் வைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் கொலைகாரன் கொடுக்கும் க்ளூ. ஸ்பேஷல் டாஸ்க் போர்ஸ் எனும் காவல்துறை பிரிவு இந்த வழக்கை புலனாய்வு செயகிறது. ஆனால் பெரிய முன்னேற்றம் இல்லை. இவர்கள் ஊடகங்களுக்கும் தகவல்களைக் எதையும் சொல்லுவதில்லை. இதனால் என் டிவியைச் சேர்ந்த நிருபர் அனசுயா. இதனைக் கண்டுபிடிக்க ஆனந்த் என்ற போலீஸ்காரருடன் நெருக்கம் காட்டுகிறார். காரியத்திற்காக இந்த காதல் நாடகம் என்று புரிந்துகொள்ளாத போலீஸ்காரர் காதல்வெறியில் அனைத்து தகவல்களையும் உளறி வைக்கிறார். இதனால், துறை ரீதியாக பெரும் அவமானத்தை சந்திக்கிறார் ஆனந்த்.
ஆனால் வழக்குக்கு அனசுயா உதவுவதால், அவள் மீது மெல்ல காதல் வளருகிறது. ஆனந்திற்கு. அப்போது ஆதரவற்றவளான அனசுயாவின் மாமா ஒருவரும் சைக்கோ கொலையாளியால் இறந்துபோக, பிரச்னை சூடுபிடிக்கிறது.
சைக்கோ கொலைகாரனின் நோக்கம் என்ன? ரோஜாப்பூ குறியீடு எதற்காக? உறுப்புகளை வெட்டப்படுவது எதற்காக என்பதற்கான பதில்களை அறிவது இறுதிப்பகுதி.
ஆஹா
படத்தின் நாயகன், நாயகி என அனைத்துமே அனசுயாவான பூமிகா சாவ்லாதான். தனது செய்தியால் சாப்பிடக்கூட உணவின்றி போன லஷ்மியை அரவணைத்து தன்னோடு வளர்ப்பதாகட்டும், கொலையாளியை துணிவோடு எதிர்ப்பதாகட்டும், காதலோடு ஆனந்தோடு பேசி நம்பிக்கைதான் உற்வின் ஆதாரம் என உறுதி காட்டுவதாகட்டும். நடிப்பில் மிளிர்கிறார்.
இயக்குநர் ரவிபாபுவின் டச் என்னவென்றால், உறுப்புதானம் என்பது தவறல்ல. மூடநம்பிக்கைகள் படி நாம் இயங்க கூடாது என படத்தில் வலுவாக வலியுறுத்தி இருக்கிறார். படத்தில் வரும் வில்லன் பாத்திரத்தை ரவிபாபுவே ஏற்று நடித்திருக்கிறார். குரூரமும்,வெறியும் மின்ன அவர் வரும் காட்சிகள் அனைத்தும் திகிலூட்டுகின்றன.
ஐயையோ
அன சுயா, பேராசிரியர் கோவிந்த் தவிர பிற கதாபாத்திரங்களுக்கு எந்த வலுவும் இல்லை. டாஸ்க் போர்ஸ் படை எந்த புத்திசாலித்தனமும் இல்லாத ஆட்களைக் கொண்டது போல உள்ளது. ஆனந்த், கோவிந்தின் பிடியிலுள்ள போலீசை மீட்க செய்யும் முயற்சி, சரியான காட்சியாக எடுபடவில்லை. ஊடகங்கள் பேசுகிறார்கள், விமர்சிக்கிறார்கள் என்பதற்காக கொலையைப் பார்த்த சாட்சியான அனசுயாவின் வாக்குமூலத்தை மதிக்காமல் காவல்துறை விட்டுவிடுமா என்ன?
ஒட்டுமொத்தமாக படத்தை திரில்லுடன் பார்க்கலாம். ரவிபாபுவின் இயக்கம் அத்தனை நீட்டாக இருக்கிறது.
பெண் சிங்கம்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக