கொரோனா காலத்தில் மனவலிமையோடு இருப்பதுதான் கடினம்! - மலைக்கா அரோரா , இந்தி திரைப்பட நடிகை





மலைக்கா அரோரா - தமிழ் விக்கிப்பீடியா
மலைக்கா அரோரா - விக்கிப்பீடியா





மலைக்கா அரோரா

இந்தி திரைப்பட நடிகை

கோவிட் -19 பாதிப்பு இன்னும் நீங்காத நிலையில் டிவி நிகழ்ச்சி படப்பிடிப்புக்கு சென்றுள்ளீர்கள். அந்த அனுபவம் எப்படியிருந்தது?

இந்த கடினமான சூழலில் அனைவரும் அதனை மறக்க வேலைக்கு சென்றுதானே ஆகவேண்டும்? நாங்கள் நடத்திய படப்பிடிப்பில் பார்வையாளர்கள் கிடையாது. முழுக்க பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து படப்பிடிப்பை நடத்தினோம். இப்போது எனது பையில் முக கவசங்கள், சானிடைசர்கள், மருந்துகள்தான் அதிகம் உள்ளன.

உங்களை எப்போதும் துரத்தியபடி இருக்கும் பத்திரிகையாளர்கள் இல்லாமல் இருப்பதை எப்படி உணர்கிறீர்கள்.

அதனை சினிமா வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே உணர்கிறேன். சினிமா மட்டுமல்ல பத்திரிகை துறையும் கூட நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வேலைகளும் கூட இனிமேல் முன்பு போல இருக்காது. இந்த உண்மை எனக்கு அவர்கள்மேல் அனுதாபத்தை ஏற்படுத்துகிறது.

உங்கள் தோழிகளை இந்த நேரத்தில் சந்தித்தீர்களா?

நான் கரீனா, கரிஷ்மா, அம்ரிதா ஆகியோரை வீடியோகால் மூலம் சந்தித்து பேசிக்கொண்டிருக்கிறேன். நாங்கள் உணவு சமைப்பது பற்றி பல்வேறு விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்வோம். இக்காலகட்டங்களில் உணவுதான் எங்களை இணைக்கிறது.

நீங்கள் மனநலம் பற்றி வெபினார் உரைகள் வழங்கிவருவதாக கேள்விப்பட்டோம்.

இந்த காலகட்டம் மிகவும் கடினமான ஒன்று. அனைத்து தொழில்துறைகளும் பாதித்துள்ளன. ஆன்லைன் வழியாக பல்வேறு உடற்பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இவற்றால்தான் நான் தப்பித்துள்ளேன். இல்லையெனில் மிகவும் சிரமப்பட்டிருப்பேன். இது உடல் ஆரோக்கியம், எடை குறைப்பு சார்ந்தது அல்ல. மனநலன் சார்ந விஷயம். முடிந்தளவு எண்ணங்களை நேர்மறையாக வைத்திருக்க முயல்கிறேன். அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள், எப்படி உணர்கிறார்கள் என்பதை நான் காதில் கேட்பதில்லை.

இந்தியா டுடே

சுஹானி சிங்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்