சீனாவுக்கு உடனடி மாற்று நாட்டை தேடுவது கடினம்! - எலக்ட்ரானிக்ஸ் துறையில் சுயசார்பு







Borders, Country, Flag, Geography, Map, Nation, Asia
cc




ராஜேஷ் சந்திரமௌலி

எலக்ட்ரானிக்ஸ் துறை வல்லுநர்

எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து வழங்கும் சேவையில் என்ன தடுமாற்றம் உள்ளது?

இத்துறையில் சிறப்பாக செயல்படும் இந்திய நிறுவனங்கள் இல்லை. இத்துறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதற்கேற்ப உடனே தங்களை மாற்றிக்கொண்டு வளரும் நிறுவனங்கள் இங்கு குறைவாக உள்ளன. இந்தியா பெரும்பாலும் எலக்ட்ரானிக் பாகங்களை தயாரித்து வழங்கும் நாடாகவே உள்ளது. இதில் தனித்துவமான நிறுவனங்கள் இல்லாமல் இருப்பது இத்துறையில் இந்தியாவின் பின்னடைவு. சிறப்பான விநியோக நிறுவனங்கள் இதில் உருவாவது அவசியம்.

எலக்ட்ரானிக்ஸ் துறையில் சீனாவே முன்னிலை வகிக்கிறது. இதற்கு மாற்று ஏதாவது இருக்கிறதா?

சீனா, இந்தியாவிற்கு ஆதாரமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரித்து வழங்குகிறது. இப்போது உடனே அதனை மாற்றிவிட முடியாது. ஆனால் மாற்று நாடாக வியட்நாம், இந்தோனேஷியா, மலேசியா, தைவான், கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. நாம் உடனே ஒரு நாட்டை முழுக்க புறக்கணித்து சீனாவுக்கு வெளியே உள்ள நாடுகளை தேட முடியாது. காரணம், அவற்றுக்கு வலிமையான விநியோக மையங்கள் இருக்கிறதா என்று தெரியவேண்டும்.

எலக்ட்ரானிக் பொருட்களின் இன்னும் என்னென்ன பொருட்களில் புகழ்பெறும் என்று நினைக்கிறீர்கள்?

உடலில் அணியும் பொருட்கள், மருத்துவம் சார்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள், தானியங்கி எலக்ட்ரானிக் பொருட்கள் தேவைப்படுகின்றன. இனி வணிக வளாகங்களில் எந்திரங்கள் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்புகள் உள்ளன.

இத்துறையில் தேவையை எப்படி அதிகரிப்பதுழ

மக்களுக்கு இந்தப் பொருட்கள் தேவைப்பட்டால் மட்டுமே எலக்ட்ரானிக் பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும். சுயமான எலக்ட்ரானிக்ஸ் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஐந்தாண்டு, பத்தாண்டு காலகட்ட அளவில் நாம் தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர் விதிகளில் நிறைய சீர்த்திருத்தங்களை செய்யவேண்டும். அப்போதுதான் இத்துறை நெகிழ்வுத்தன்மையுடன் இயங்கும்.

டைம்ஸ் ஆப் இந்தியா

ராஜேஷ் சந்திரமௌலி


கருத்துகள்