தத்தமது பிள்ளைகளின் நலனுக்காக திருமணம் செய்துகொள்ள நினைக்கும் பெற்றோர்! - பாஸ்கர் ஒரு ராஸ்கல்
பாஸ்கர் ஒரு ராஸ்கல்
இயக்கம் சித்திக்
வசனம்: ரமேஷ் கண்ணா
ஒளிப்பதிவு: விஜய் உலகநாதன்
இசை அம்ரிஷ்
மலையாளத்தில் சிறப்பாக ஓடிய
படம், தமிழில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறப்பாக இருக்கிறதா என்றால் என்னவோ போல உருவாக்ககப்பட்டிருக்கிறது.
அரவிந்த சாமி மட்டுமே படத்தின் பலம் |
படித்த தொழிலதிபர். அவருடைய
மகனுக்கு படிப்பு வரவில்லை. அதற்கு பதிலாக எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீசாக அடிதடி,
வெட்டுக்குத்து, இடத்தை கப்ஸா செய்வது, கட்டப்பஞ்சாயத்து என அனைத்து விஷயங்களும் கைவருகிறது.
இந்த நிலையில் அவரது சிறுவயது மகன், அவரது ஆக்ரோஷ கனல்கண்ணன் சண்டைகளால் அவரை அப்பா
என்று கூப்பிடவே தயங்குகிறான். அம்மா இல்லாத பையன் என்பதால் பாஸ்கர் அவனை பெரிதாக கண்டிப்பதில்லை.
இந்த சூழ்நிலையில் பாஸ்கர், தனது மகனின் பள்ளிக்கூட தோழியை சந்திக்கிறான். அச்சிறுமியின்
தாயை அவனுக்கு பிடித்திருக்கிறது. அவளுக்கும் பாஸ்கரைப் பிடித்திருக்கிறது. ஆனால் அதனை
வெளிப்படையாக சொல்ல தயங்குகிறார்கள். இதனை உடைத்து பேசினால் பாஸ்கரின் மகன், அவனது
பள்ளித்தோழி என இருவருக்குமே பெற்றோர் கிடைத்துவிடுவார்கள். சிறுவன், சிறுமி நினைத்தால்
போதுமா? விதியும் நினைக்கவேண்டுமே! அங்குதான் நிறைய ட்விஸ்டுகள் நடைபெறுகின்றன.
ஆஹா
அரவிந்தசாமி நன்றாக நடித்திருக்கிறார்
வேட்டி கட்டினாலும் காலைத் தூக்கி வானில் பறந்து வில்லன்களை உதைக்கிறார். மால்களுக்கு
வேட்டி, சட்டையோடு சென்று பைக்கில் சண்டைபோட்டு ரகளை செய்கிறார். மகன் தன்னை அப்பா
என்று கூப்பிட வெட்கப்படுகிறான் என்றவுடன் கண்கலங்குவது, திருமணம் உறுதியாகி நின்றவுடன்
மனம் உடைந்து போவது என செம ஸ்கோர் செய்திருக்கிறார். ஆனால் பிற அம்சங்கள் அனைத்தும்
காலை வாருகின்றன.
ஐயையோ
இசை வேலைக்கு ஆகவில்லை.
சித்திக்கின் படங்களில் அனைவரும் எதிர்பார்க்கும் அட்டகாச காமெடி இப்படத்தில் அடப்பாவமே
என்று சொல்லும்படி இருக்கிறது. சூரியின் பேசும் பேச்சு, 2.30 மணி நேரம் தாண்டியும்
காதில் கேட்டு தொந்தரவு செய்கிறது. சிறுவன், சிறுமி இருவருமே கொடுத்த காசுக்கு மேல்
நடித்திருக்கிறார்கள். இதனால் படம் பெரிய சுவாரசியங்களின்றி நகர்கிறது. நிகிஷா படேல்
பாத்திரம் எதற்கு உருவாக்கப்பட்டது என்றே புரியவில்லை.
சலிக்க வைக்கும் ராஸ்கல்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக