மருந்தை இந்தியர்கள் அனைவரும் பயன்படுத்த மூன்று ஆண்டுகள் தேவை! - ஆதார் பூனம்வாலா
ht |
ஆதார் பூனம்வாலா, சீரம்
இன்ஸ்டிடியூட்
கோவிட் -19 நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான மருந்தை உலக நாடுகளே
தேடி ஓடிக்கொண்டிருக்கின்றன. நீங்கள் இதற்கான பணியை முன்னமே தொடங்கிவிட்டீர்களா?
மூன்றாவது கட்ட சோதனை ஆகஸ்ட்
முதல்வாரத்தில் தொடங்கும். உலக நாடுகளுக்கு வழங்குவது கடினமான பணி. பல லட்சம் பாட்டில்
மருந்துகளை தயாரித்து வழங்குவது மிகவும் கடினமாகவே இருக்கும். நாங்கள் மருந்து சோதனையில்
மூன்றாவது நிலையில் உள்ளோம். இதற்கான அனுமதி கிடைத்தால்தான் நாங்கள் அதனை சந்தைப்படுத்த
முடியும். இச்சோதனை சரியாக வேலை செய்யாவிட்டால், மீண்டும் வேறுவழியில் சோதனைகளை செய்யவேண்டும்.
இதில் செய்யப்பட்டு முதலீடு அதிகம்.
மருந்தை அனைவரும் பயன்படுத்துவதற்கான காலவரம்பு உண்டா?
அனேகமாக இந்தியாவில் அடுத்தாண்டு
டிசம்பர் மாதத்தில் மருந்தை சந்தைக்கு கொண்டு வரலாம் என்று நினைக்கிறேன். கண்டிப்பாக
மருந்தை சோதிக்க இரண்டு ஆண்டுகளேனும் தேவை. இப்போது இருக்கும் நிலையில் அரை ஆண்டேனும்
அவசியம். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் 30 சதவீத மக்களுக்கு மருந்து கிடைக்க வாய்ப்புள்ளது.
அமெரிக்காவில் இந்த வாய்ப்பு 1 சதவீதமாக உள்ளது.
நாம் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட சோதனைகளை செய்துள்ளோம்.
இது உங்களுக்கு போதுமானதாக தோன்றுகிறதா?
நீங்கள் கூறுவதை நகைச்சுவையாகவே
எடுத்துக்கொள்கிறேன். இந்த எண்ணிக்கை நூறு கோடியாகவேண்டும் என்பதுதான் எனது ஆசை. மருத்துவரின்
பரிந்துரையின்றி விலையின்றி இந்த சோதனைகள் நடைபெறவேண்டும். முதலில் சோதனைகளுக்கு பல்வேறு
வரம்புகள் இருந்தாலும் தொடர்ச்சியாக அவை அப்படி தொடரக்கூடாது.
சில மாநிலங்கள் கோவிட் -19 தொற்று சோதனையை சரிவரசெய்யவில்லை
என்று நினைக்கிறீர்களா?
இதில் அவர்களது செயல்பாடு
பற்றி சொல்ல ஏதுமில்லை. இதற்காக அவர்கள் குற்றவுணர்வும் கொள்ளவேண்டியதில்லை. இந்த தொற்றுநோய்
மிக வேகமாக பரவும் இயல்புகொண்டது. யாரும் இதனை தடுத்துவிட முடியாது. கட்டுப்படுத்தவும்
முடியாது.
ஆனால் பாதிப்பை குறைப்பதற்கான
முயற்சியை எடுக்கலாம். தனிமைப்படுத்தல் பகுதிகள், சிகிச்சை அறைகள், வசதிகள் ஆகியவற்றை
செய்யலாம். இவற்றை பிற மாநிலங்களோடு ஒப்பிட்டு செய்யவேண்டியதில்லை. அவமானப்படவேண்டியதில்லை.
அறிவியல் முறையில் இதனை அணுகுவதே முக்கியம்.
இந்துஸ்தான் டைம்ஸ்
சுனேத்ரா சௌத்ரி
கருத்துகள்
கருத்துரையிடுக