மக்களின் தகவல்களை பாதுகாக்க முயலும் பெண்! - வேரா ஜொரோவா
வேரா ஜொராவா - ரேடியா பிராக் |
வேரா ஜொரோவா
2006ஆம் ஆண்டு தவறான குற்றச்சாட்டுக்கு
உள்ளாகி ஒருமாதம் கழித்து சிறையில் இருந்து வெளியே வந்திருந்தார் வேரா. அப்போதுதான்
எப்படி சரியான தகவல்கள் இன்றி பல்லாயிரம் மக்களுக்கு அநீதி வழங்கப்படுகிறது என்பதை
அறிந்தார். பின்னாளில் ஐரோப்பிய யூனியனின் நீதித்துறைக்கு தலைவர் ஆனார்.. அதனால் விதிமுறைகளை மீறிய டெக் நிறுவனங்களுக்கு
அதிர்ச்சியூட்டும் பல்வேறு விதிகளைக் கொண்டுவந்தார். அதில் முக்கியமானது தகவல் பாதுகாப்பு
மற்றும் முறைப்படுத்தல் விதி. இதன்மூலம் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்களின் தகவல்களை
பாதுகாக்க முடியும்.
இதனால் டெக் நிறுவனங்கள்
பயனர்களின் அனுமதி இன்றி அவர்தம் தகவல்களை வியாபார நிறுவனங்களுக்கு விற்க முடியாது.
இந்த வகையில் இவரின் செயல்பாடு முக்கியமானது. நாம் அனைவரும் அதனை பின்பற்றவேண்டியதும்
கூட.
2014 முதல் 2019 வரை நீதித்துறை கமிஷனராக வேரா பதவி வகித்தார்.
மார்க்கரேட் வெஸ்டாகர்
கருத்துகள்
கருத்துரையிடுக