சீர்திருத்தங்கள் மூலம் மின்வாரியங்களின் நஷ்டத்தை குறைக்க முயல்கிறோம்! - ஆர்.கே.சிங், மின்துறை அமைச்சர்
இந்துதமிழ் |
ஆர்.கே.சிங், மத்திய மின்சாரத்துறை
அமைச்சர்
மின்சாரத்துறை மீண்டும் பல்வேறு சீர்திருத்தங்களுக்கு உள்ளாகும்
சூழ்நிலையில் உள்ளது? என்ன காரணம்?
இப்போதுள்ள மின்சாரத்துறையை
சூழலுக்கு ஏற்றபடி மாற்ற பல்வேறு சீர்திருத்தங்களை செய்யவேண்டிய தேவை உள்ளது. 2003ஆம்
ஆண்டு மின்துறை சட்டம் உருவானது. ஆனால் இந்த சட்டத்தை பல்வேறு மாநிலங்கள் அமல்படுத்தவில்லை.
சில மாநிலங்கள் மின்சாரத்தை மக்களுக்கு இலவசமாகவும் வழங்கிவந்தன. அப்படி வழங்கினாலும்
மத்திய அரசுக்கு, வழங்கும் மின்சாரத்தைப் பொறுத்து தொகையை வழங்கவேண்டும். சீர்திருத்தங்கள்
அமலானால் மக்கள் அவர்களின் பயன்பாட்டுக்கு ஏற்றபடி பணம் செலுத்துவார்கள். மின்சார வாரியமும்
நஷ்டத்தில் இயங்கும் அவசியம் இருக்காது. மாநிலங்களில் செயல்படும் வாரியங்களில் மின்சாரம்
எப்படி செலவழிக்கப்படுகிறது என்பதற்கான முறையான ஆவணங்கள் இல்லை .
எப்படி மின்சார வாரியங்கள் இழப்பில் உள்ளன என்று கூறுகிறீர்கள்?
மோசமான நிறுவனத்திற்கு முதலீடாக
பணத்தை வழங்குவது சரியாக இருக்காது. இனிமேல் மின்சார வாரியங்கள் தங்களின் நிலைமை சீராக்கிக்கொண்டு
சீர்திருத்தங்கள் மூலம் 12 சதவீத நஷ்டத்தையேனும் ஈடுகட்டும் திட்டமிருந்தால் மட்டுமே
அவர்களுக்கு மத்திய அரசின் மின்துறை நிதிக்கழகம், கிராமப்புற மின்துறை அமைப்பு என இரண்டும்
கடன்களை வழங்கும். இல்லையெனில் அவர்களுக்கு கடன்கள் கிடையாது. மாநில அரசின் மின்சார
வாரியங்கள் தங்களுடைய கடன் தொகையை கட்டவில்லையென்றால், அவர்களுக்கு அடுத்த முறை நிதி
வழங்க 90 நாட்கள் காலக்கெடு உண்டு.
இந்த நடவடிக்கைகளை
எடுக்க துணிச்சலான அதிகாரிகள் தேவை ஆயிற்றே?
உண்மைதான். இன்று மாநில
அரசின் ஆதரவில் வரும் அதிகாரிகள் இப்பணியை சிறப்பாக செய்வார்களா என்று தெரியாது. எனவே,
தேசிய அளவில் இதற்கான அமைப்பு ஒன்று உருவாக்கப்படும். இதில் உள்ளவர்கள் யுபிஎஸசி தேர்வு
மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த அமைப்புக்கு மாநில அரசுகளும் தங்கள் பரிந்துரைகளை
வழங்கலாம். இந்த அமைப்பு வெளிப்படையான தன்மையுடன் இயங்கும்.
மத்திய அரசின் நடவடிக்கை மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாக
உள்ளது என மாநில அரசுகள் புகார் தெரிவிக்கின்றனவே?
மத்திய அரசின் நடவடிக்கை
மாநில அரசுகளின் உரிமைகளை, அதிகாரத்தை பறிப்பது அல்ல. அரசு வெளிப்படைத்தன்மையுடன் நிர்வாகம்
நடப்பதற்காகவே மக்களுக்கு நேரடியாக வங்கிக்கணக்கில் பணத்தை அளிக்கிறது. மின்சார வாரியத்தில்
அதன் பயன்பாட்டாளர்கள் அனைவருக்கும் தனிக்கணக்கு ஏற்படுத்தப்பட்டு, அவர்களுக்கு மானியம்
வழங்கப்படும். இந்த செயல்முறையை சிலர் தவறாக புரிந்துகொண்டு பேசுகிறார்கள். மானிய உதவி
வழங்குதலில் மக்கள் முதலில் கட்டணத்தொகையை செலுத்தவேண்டும். பின்னர். அவர்களுக்கு மானிய
உதவி வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
நீங்கள் தனியார்மயத்தை ஊக்குவிப்பதாக பலரும் விமர்சித்து
வருகிறார்களே? இந்த விமர்சனங்கள் பல்வேறு மாநிலங்களிடமிருந்தும் வருகிறதே?
என்னைப் பொறுத்தவரை மக்களுக்கு
இருபத்து நான்கு மணிநேரமும் மின்சாரம் கிடைக்கவேண்டும். அதேசமயம் இவற்றை வழங்கும் மின்சார
வாரியம் ஆரோக்கியமான நிதிநிலைமையில் இயங்கவேண்டும். வணிகரீதியாக அவை இழப்பைச் சந்திக்க
கூடாது. அரசு நிறுவனங்களோடு தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டாலும் எங்களுக்கு
சரிதான். இதில் கிடைக்கும் தீர்வு என்பது மின்சார வாரியம் சிறப்பாக இயங்கவேண்டும் என்பதுதான்.
மாநில அரசுகள் மின்சார வாரியத்தை தானே வைத்துக்கொண்டு இயங்கினாலும் அவற்றின் நிலைமை
சரியாக இருக்கவேண்டும்.
இந்தியா டுடே
கருத்துகள்
கருத்துரையிடுக