நியூஸ்ரூம்: முகத்திற்கு பயன்படுத்தும் க்ரீம்களில் அதிகரித்துள்ள பாதரசம்!


Woman, Sexy, Portrait, Hand On Face, Retro, Gorgeous



நியூஸ்ரூம்!

அட!

புதிய  பலம்!

இந்திய அரசின் விமானப்படைக்கு போயிங் நிறுவனம்  ஒப்பந்தப்படி 37 ஹெலிகாப்டர்களை தயாரித்து வழங்கியுள்ளது. 2015-16 ஆண்டுகளில் அமெரிக்க நிறுவனமான போயிங்குடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. 22 AH-64E Apache, 15 CH-47 Chinook வகை ஹெலிகாப்டர்களை போயிங் நிறுவனம் இந்தியாவுக்கு தயாரித்து வழங்கியுள்ளது. இயற்கைப் பேரிடர் பணிகளில் இந்திய அரசுக்கு உதவக்கூடிய திறன் பெற்றது சினூக் ஹெலிகாப்டர்கள். இவை இந்திய –சீன எல்லைப்பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

யுபிஐ

ஐயையோ!

அழகு க்ரீம் ஆபத்து!

இணைய விற்பனைத் தளங்களில் விற்கப்படும் அழகுசாதன க்ரீம்களில் பாதரசத்தின் அளவு அதிகமாக உள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. பாக்.கின் கோரி, ஹாங்காங்கைச்சேர்ந்த ஸ்மைல்பான் ஆகிய நிறுவனத்தின் க்ரீம்களில் அதிகளவு பாதரசம் இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. Zmwg எனும் அமைப்பு, பாதரச அளவை ஒழிப்பதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இதனால் வரும் ஆண்டில் இறுதிக்குள் பல்வேறு நாடுகள் க்ரீம்களுக்கு தடைவிதிக்கும் வாய்ப்பு உள்ளது.

ராய்ட்டர்

அப்படியா?

சாதனை முறியடிப்பு!

அமெரிக்காவைச் சேர்ந்த தடகள வீரர், 200 மீட்டர் பிரிவில் உசேன்போல்ட் சாதனைகளை முந்தியுள்ளார். 22 வயதான நோவா லைலெஸ் மைதானத்தில் ஓடி, 18.90 நிமிடங்களில் எல்லையை அடைந்து சாதனை படைத்தார். இதற்கு முன்னர் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட், 19. 19 என்ற நிமிடங்களில் ஓடியிருந்தார். இவரது வீடியோவைப் பார்த்தபோதுதான், அவர் தவறான பாதையில் ஓடியிருந்தார் என்பதும், 185 மீட்டர் தூரம்தான் கடந்திருந்தார் என்றும் தெரியவந்திருக்கிறது.

பரிதாபம்!

படுகொலை

ஈராக்கின் பாக்தாத் நகரில் தீவிரவாத அமைப்புகள் பற்றி ஆராய்ந்து வந்த ஆராய்ச்சியாளர் ஹாசிம், மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்படுள்ளார். ஐஎஸ் அமைப்புடனான ஈராக் செய்த போரில் பிரபலமானவராக பல்வேறு டிவி சேனல்களில் பேசியுள்ளார். இவர் என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை.

India panel proposes new regulator for non-personal data

As India moves to tighten policies on its citizens’ data held and processed by companies such as Facebook (FB.O), Google (GOOGL.O) and Amazon (AMZN.O), it set up the panel last year to make recommendations on the regulation of “non-personal data”. This is a term for data viewed as a critical resource by companies that analyse it to build their businesses and describes information that is independent of personal details such as names, or anonymised to protect people’s identity. “There is a need to create a regulator or authority for data business, which provides centralized regulation for all non-personal data exchanges,” the government-appointed panel said in the report.

படச்செய்தி


இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் யாத்னியா கசாடா திருவிழா நடைபெறுகிறது. அதில் இறைவனுக்கு காய்கறிகள், அரிசி, பழங்களை வீசுகின்றனர். அதனை பெற மக்கள் வலையுடன் காத்திருக்கும் காட்சி.

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்