இரு காதலிகளை நெஞ்சார விரும்பும் கிருஷ்ணாவின் கதை! - கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா!
கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா
இயக்கம்: ரவிகாந்த் பெருப்பு
கதை, வசனம்: சித்து ஜோனல்கட்டா
இசை: ஸ்ரீசரண் பகலா
ஒளிப்பதிவு:
தெலுங்கு சினிமாவுக்கு புத்துணர்ச்சியான
காதல் கதை. நிறைய ஸ்டீரியோ டைப் கதைகளைப் பார்ப்போம். இதில் நாம் நினைத்துப் பார்க்காத
டிவிஸ்டுகளும், வியப்பும், பிரமிப்பும் திடுக்கிடலும் உண்டு. இந்த படத்திற்கு அடுத்த
பாகமும் வர வாய்ப்புள்ளது.
கிருஷ்ணா கல்லூரி படிக்கும்போது
சத்யாவை பார்க்கிறான். அவளை துரத்தி துரத்தி காம்ளிமெண்ட் கொடுத்து காதலிக்கிறான்.
ஆனால் அவளை பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்ற, சத்யா அவனை ச்சீ என விலக்கிவிட்டு
கேட்ஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறாள். அந்த பிரேக் அப்பிலிருந்து சிக்கன் பிரியாணியை
அழுதுகொண்டு சாப்பிட்டுவிட்டு வெளியே வருகிறான் கிருஷ்ணா. அப்புறம் என்ன பிரேக் அப்பை
மறக்க மற்றொரு காதல். இம்முறை, ராதா என்ற பெண் மாட்டுகிறாள்.
அந்த நேரம் பார்த்து கிருஷ்ணாவின்
படிப்பு முடிந்து கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைக்கிறது. இது ராதாவுக்கு பிடிக்கவில்லை.
தன்னோடு அவன் இருக்கவேண்டும். நேரம் செலவிட வேண்டும் என நினைக்கிறாள். ஆனால் அவன் வேறுவழியின்றி
பெங்களூருவுக்கு செல்கிறான். அங்கு தங்கையின் வீட்டில் தங்குகிறான். அங்கு அவனுக்கு
குளித்துவிட்டு டவலுடன் அறிமுகமாகிறாள் ருக்ஸார். நிர்வாணா என்ற கஃபே ஓனர். அங்கே வேலை
செய்துகொண்டு ருக்ஸாரின் கஃபேயில் ஜாலியாக பாடிக்கொண்டிருக்கும்போது, அங்கே வருகிறாள்
முன்னாள் காதலி சத்யா ராவ். அப்புறம் என்ன அவளா? இவளா? என தவிப்பு கிருஷ்ணாவுக்குள்
எழ அவன் யாரைக் கையைப் பிடித்து இழுத்தாள், யாருக்கு ஷட் அப் தி மவுத் சொன்னான் என்பதுதான்
இறுதிக்காட்சி. படம் இப்பாகத்தோடு முடிந்தது போல தெரியவில்லை. ருக்ஸாரின் பாத்திரம்
பற்றி இன்னும் சொல்லவேண்டியிருக்கிறது. இது அடுத்த பாகமாக தொடரும் என எதிர்பார்க்கலாம்.
படம் முழுக்க ஸ்ரீசரண் பகலாவின்
இசை அவ்வளவு புத்துணர்ச்சியாக ஈர்க்கிறது. இயல்பான வசனங்களும், எதார்த்தமான சித்து
ஜோனல்கட்டா, ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் நடிப்பும் படத்தை ரசித்துப் பார்க்கவைத்திருக்கிறது.
புத்துணர்வூட்டும் கதைக்களம்.
கலாசாரம், பண்பாடு, சுப முடிவு என்பதை மறந்துவிட்டீர்கள் என்றால் படம் பார்க்க ரெடியாகுங்கள்.
ரசிக்க வைக்கும் குறும்பான
லீலை
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக