தன்னையறியாமல் திருடுபவனின் காதல் கரையேறியதா? ராஜூகாடு
ராஜூகாடு 2018
இயக்கம் சஞ்சனாரெட்டி
வசனம் வெள்ளிகொண்டா ஸ்ரீனிவாஸ்
கதை ஹபீப் ஃபைசல், மாருதி
ஒளிப்பதிவு பி.ராஜசேகர்
இசை கோபிசுந்தர்
கிளெப்டோமேனியா குறைபாடு
கொண்டவரின் காதல் வாழ்க்கைதான் படம்.
தன்னையறியாமல் பொருட்களை
திருடிவிடும் பழக்கம் கொண்டவன் ராஜூ. டேட்டிங் சென்ற பெண்ணின் தங்கச்சங்கிலி, நெத்திச்சுட்டி
உட்பட அனைத்து விஷயங்களையும் சுட்டுக்கொண்டு வந்துவிடுகிறான். திருட்டு வேலைகளால் அந்த
பெண் அதிர்ச்சியடைந்து, போலீசில் புகார் என்றளவில் பேச அத்தோடு அந்தக்காதலுக்கு முற்றுப்புள்ளி
வைக்கப்படுகிறது. அப்போது மார்க்கெட்டில் அமைராவை, ராஜ் பார்க்கிறான். பார்த்தவுடனே
ஒகே என இதயம் சொல்ல காதல் டேக்ஆஃப் ஆகிறது. காதலியின் அப்பா போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பது
ராஜின் பெற்றோருக்கு குலைநடுக்கத்தை தருகிறது.
காதலியின் தாத்தா பார்த்து
மாப்பிள்ளையைக் கவனித்து ஓகே சொல்லுவார் என ஒட்டுமொத்த குடும்பமும் அப்படியே நெல்லூருக்கு
மாறுகிறது. இந்த காட்சிக்கு முன்னர், தீவிரவாதி ஒருவனுடன் நடந்துசெல்லும்போது மோதிவிடுவார்.
அதில் அவனிடம் இருந்த பாமை அபேஸ் செய்துவிடுவார் ராஜ். இறுதியில் தனது குறைபாட்டை காதலிக்கு
சொன்னாரா, அவரின் சட்டைப் பையில் இருந்த பாம் வெடித்ததா, இல்லையா என்பதுதான் கதை.
ஆஹா
காதலில் உருகுவதும், குறைபாட்டுக்காக
கலங்குவதும் ராஜ், பிரமாதமாக நடித்திருக்கிறார். அவரைப் பார்த்து உடனே காதலுக்கு சிவப்பு
கம்பளம் விரிக்கும் காதலியாக அமைரா முடிந்தளவு நடித்திருக்கிறார். நிறைய இடங்களில்
அவர் சிரிப்பதே போதுமானதாக இருக்கிறது. படத்தில் இன்னொரு நாயகன் போலவே ராஜின் அப்பாவாக
ராஜேந்திரபிரசாத் பிரமாதப்படுத்தியிருக்கிறார். டாக்டராக வரும் பிரிதிவிராஜ், வெரைட்டியான
டாக்டராக காமெடியில் அசத்துகிறார். கிருஷ்ணபகவான் குறைந்தநேரம் வந்தாலும் ஊமையாக இருக்கும்
சுப்பராஜூவின் ஊமை மொழிக்கு டப்பிங் செய்து கலகலக்க வைக்கிறார்.
ஐயையோ
பாம் என்று ஒன்று சொல்கிறார்களே
என்று சொன்னால், கிளைமேக்சிற்காக இயக்குநர் அதனை பதுக்கி வைத்திருக்கிறார் என்பது அப்புறம்தான்
நமக்கு தெரிகிறது. திருடனால் காதலியின் தாத்தாவின் மனைவி உயிர் பறிபோகிறது. அதற்காக
திருடுபவர்களை எதற்கு என விசாரிக்காமல் கைகளை வெட்டி பூச்செடியை நடுவது மூலம் என்ன
செய்தியை அவர் சொல்ல வருகிறார்? அமைரா உண்மையில் ராஜை விரும்பினால் அவரது குறைபாடு
தெரிந்தாலும் ஏற்றுக்கொள்வதை என்ன தடுக்கிறது?
திருட்டுப்பயலே!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக