துரோகி என்ற பழிச்சொல்லிலிருந்து தன் தந்தையைக் காப்பாற்றும் மகன்! - ஆட்டாடுகுண்டோம் ரா!
ஆட்டாடுகுண்டோம் ரா |
ஆட்டாடுகுண்டோம் ரா
இயக்கம் நாகேஸ்வர ரெட்டி ஜி
ஒளிப்பதிவு
இசை அனுப் ரூபன்ஸ்
பாச நேசமான இரு நண்பர்கள்.
தொழில்வாழ்க்கையிலும் வெற்றியைச் சந்திக்கிறார்கள். இவர்களைப் பிரிக்க இவர்களின் எதிரி
நினைக்கிறான். அதற்கான காலமும் கனிகிறது. இதனால் ஆனந்த் பிரசாத் என்ற நண்பன் குற்றமற்றவனாக இருந்தாலும்
அதனை அவனது நண்பன் விஜய் ராவ் ஏற்க மறுத்து அவனை அடித்து உதைத்து என்னைப் பார்க்காதே முகத்தில்
விழிக்காதே என்று கூறிவிடுகிறான். வியாபாரத்தால் ஏற்பட்ட நஷ்டத்தால் விஜய் ராவின் குடும்பமே
கீழ்நிலைக்கு வந்துவிடுகிறது.
காமெடியே படத்திற்கு பெரும் பலம்! |
சிலபல ஆண்டுகளுக்குப் பிறகு ஆனந்த் பிரசாத்தின் மகன் தனது அப்பா சதியை செய்யவில்லை. துரோகத்திற்கு உடந்தை இல்லை என்று நிரூபித்து
இழந்த தொகையை எப்படி மீட்கிறான் என்பதுதான் கதை.
ஆஹா
கதையின் ட்விஸ்டே சுசாந்த்
(கார்த்திக்) யார் என்பதுதான். உற்சாகமாக நடித்திருக்கிறார். சோனம் பாடலுக்கான டெடிகேட்.
பிரம்மானந்தம் படத்தின் இன்னொரு நாயகன் போலவே வருகிறார். படத்தில் அவருக்கு சுசாந்தை
விட அதிக காட்சிகள் போல தெரிகிறது. அனுப் ரூபனின் பாடல்கள் நன்றாக இருக்கின்றன.
ஐயையோ
முரளி சர்மா, தனது நண்பர்
துரோகம் செய்துவிட்டார் என்பதை அவ்வளவு எளிதில் எப்படி நம்புகிறார்? நண்பர் மீது ஏராளமான கோபம் கொள்ள என்ன காரணம்? தான்
தவறு இல்லை என்று நிரூபித்தபிறகு உடனே ஏற்றுக்கொள்கிறார். இந்த காட்சிகள் முரளி சர்மாவின்
புத்திசாலித்தனத்தை சொல்லுகிறதோ?
தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பையனை அவரது குடும்பத்தினரே தெரியாமல் இருப்பார்களா என்ன? உடல் ஏறக்குறைய மாறலாம். முகம் கூட மாறுமா என்ன?
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக