நியூசிலாந்தின் முன்னுதாரணத் தலைவர் ஜெசிண்டா ஆர்டெர்ன்!
ஜெசிண்டா ஆர்டெர்ன |
சிரில் ராம்போசா |
டைம் 2019 செல்வாக்கு பெற்ற தலைவர்கள்
சிரில் ராம்போசா
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த
அரசியல் தலைவர் சிரில் ராம்போசா. சோவிடோ நகரில் பிறந்தவர் தற்போது தென் ஆப்பிரிக்காவில்
அதிபராக உள்ளார். இதற்கு முன்னர், சமூக உணர்வு கொண்ட வணிகராக செயல்பட்டார். தேர்தலில்
நிற்கும்போது அவருக்கு வயது 66. ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் சார்பாக நின்று வென்றார்.
மக்களின் வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு என பல்வேறு விஷயங்களோடு போராடி வருகிறார். ஒரே
இரவில் மாற்றங்கள் நடந்துவிடாது என்று கூறியவர், சிறப்பான நாட்டை உருவாக்க மக்களுக்கு
கொடுத்த வாக்குறுதிப்படி உழைத்து வருகிறார்.
விவியன் வால்ட்
ஜெசிண்டா ஆர்டெர்ன்
நியூசிலாந்தில் கிறிஸ்ட்
சர்ச்சில் நடந்த தாக்குதல் உலகம் முழுக்க பெரும் பயத்தை ஏற்படுத்தியது. தீவிரவாதி அத்தகையை
பயத்தையே ஏற்படுத்த விரும்பியிருந்தார். ஆனால் அதனை அந்நாட்டு பிரதமர் ஜெசிண்டா எதிர்கொண்ட
விதம் உண்மையில் பாராட்டுக்குரியது. குற்றவாளியை குறிப்பிட்ட மதம் என்று குறிப்பிடாமல்
கைது செய்தார். தான் நடத்திய தாக்குதலை சமூக வலைத்தளத்தில் நேரலை செய்திருந்த விஷயத்தை
கண்டறிந்து அதனை நீக்க நடவடிக்கை எடுத்தார். பலியான மக்களுக்கு உறுதுணையாக அவர் கூடவே
நின்று அவர்களை அரவணைத்தார். அதுமட்டுமன்றி, அங்கு துப்பாக்கிகளை வாங்குவதற்கான விதிகளையும்
மாற்றி அமைத்தார். தீவிரவாத தாக்குதல் ஏற்பட்டது துரதிர்ஷ்டமான சூழல் என்றாலும் அதனை
சமாளித்த விதத்தில் முன்னுதாரண தலைவரை அடையாளம் காட்டியுள்ளார் ஜெசிந்தா ஆர்டெர்ன்.
சாதிக் கான்
கருத்துகள்
கருத்துரையிடுக