பெண்களின் வேலைவாய்ப்புக்கு உதவும் பெண்களின் குழு - கூல் கன்யா


















Meet The Kool Kanya Team




நம்பிக்கை மனிதர்கள்


வனிஸ்கா கோயங்கா(vaniska goenka)


எனக்கு திடீரென ஒரு உண்மை தெரிந்தது. பல்வேறு அலுவலகங்களிலும் கூட பெண்களின் சதவீதம் குறைவுதான். எனவே அவர்களுக்கு உதவ முடிவெடுத்தேன். அதற்காகவே அவர்களுக்கான பணி ஆலோசனைகளை வழங்க கூல் கன்யா(Kool Kanya) என்ற அமைப்பைத் தொடங்கினேன்.” என்று உற்சாகமாக பேசுகிறார் வனிஸ்கா.

ஒருமுறை வனிஸ்காவின் வீட்டில் குடும்ப வியாபாரத்தை அவருடைய தந்தைக்கு பிறகு யார் பார்த்துக்கொள்வது என்று பேசிக்கொண்டிருந்தனர். அவருடைய தந்தைக்கு இரு மகள்தான் இருந்தனர். அதுதான், நான் இருக்கிறேனே என்று வனிஸ்கா நினைத்தார். ஆனால் அவரை பொருட்டாகவே குடும்பத்தினர் கருதவில்லை. பின்னாளில் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் நிறுவனத்தை வனிஸ்கா நிர்வாகம் செய்தார். அப்போது தன்னைச் சுற்றிலும் பார்த்தபோதுதான் குடும்பத்தினர் அப்படி கவலைப்பட்டு பேசியதன் காரணம் புரிந்தது. அவர் அலுவலகத்தில் அவர் மட்டும்தான் ஒரே பெண். அனைவரும் ஆண்களாகவே இருந்தனர்.

2019இல் கூல் கன்யா என்ற நிறுவனம் தொடங்கியபோது, அந்த நிறுவனம் பெண்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சிகளை வழங்கியது. அதோடு, அவர்களின் வாழ்க்கை வழிகாட்டு பயிற்சிகளோடு உளவியல் சார்ந்தும் உதவியது. ஃப்ரீலான்சர்களாக பணிபுரியவும், விரும்பி துறையில் திறமையை வளர்த்துக்கொள்ளவும், சந்தையில் பொருட்களை விற்கவும் உதவினர். இப்போது பெருந்தொற்று பாதிப்பால் பாதிக்கப்பட்ட 21 ஆயிரம் பெண்களுக்கு உதவி வருகிறார் வனிஸ்கா. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பல்வேறு வணிகங்களை தொடங்கி நடத்துவதற்கான பயிற்சிகளை வழங்கி வருகிறோம். வெபினார் வழியாக இதற்கான பயிற்சிகளையும் நாங்கள் வழங்குகிறோம். நாங்கள் பெண்களின் கனவு என்னவாக இருந்தாலும் அவர்களுக்கு அக்கனவு நிறைவேற உதவுகிறோம் என்கிறார் வனிஸ்கா.

கெட்வொர்க் 2020 என்ற திட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த திட்டத்தில் வடிவமைப்பு சார்ந்த திறன்களைக் கொண்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தந்து வருகிறார். 18 நிறுவனங்கள் பங்குகொண்ட இத்திட்டத்திற்கு 697 நிறுவனங்கள் பங்குகொண்டுள்ளன.


தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

மேதா தத்தா யாதவ்



கருத்துகள்