இடதுசாரி அரசை எதிர்த்து போராடும் துணிச்சலான அரசியல்வாதி! - ஜூவான் குவைடோ








Venezuela's Maduro cuts relations with U.S. as Trump recognizes ...
ஜூவான் குவைடோ 





ஜூவான் குவைடோ

வெனிசுலாவைச் சேர்ந்த அரசியல்வாதி, தைரியமாக அளவில்லாத துணிச்சலுடன் வெனிசுலா அதிபர் மதுரோவை எதிர்த்து வருகிறார். 35 வயதான இவர் முன்னர் பாப்புலர் வில் என்ற கட்சியில் உறுப்பினராக இருந்தார். எழுத்தார் காப்ரியல் கார்சியா மார்க்வஸ், லத்தீன் அமெரிக்காவில் தனது தினசரி வாழ்க்கையில் பார்ப்பதை மாய எதார்த்தவாத எழுத்துக்களாக எழுதினார். அதற்கு வாழும் சாட்சியாக இருப்பவர், ஜூவான் குவைடோதான்.

ஆளும் அரசுக்கு எதிராக துணிச்சலுடன், உற்சாகமாக, ஊக்கத்துடன் செயல்பட்டு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து சாதனை செய்திருக்கிறார் குவைடோ. நாட்டிலுள்ள பலரும் சிறுபிள்ளைத்தனமான சுயநல அரசியலில் ஈடுபட்டு மறைமுகமாக மதுரோவுக்கு உதவிக்கொண்டிருந்தனர். ஆனால் குவைடோ எந்த இடத்திலும் மக்களின் ரத்தம் சிந்தாமல் போராட்டங்களின் வழியாக எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்.

மக்கள் மீதுள்ள நம்பிக்கை, உளச்சான்று கொண்ட அறிவுடன் செயல்பட்டு வருகிறார் குவைடோ. இது போதாதா மாற்றங்கள் நடைபெறுவதற்கு?

ஜூவான் மானுவேல் சான்டோஸ்


கருத்துகள்