இஸ்லாமியர்களையும், இடம்பெயர்ந்த தொழிலாளர்களையும் மோசமாகவே போலீசார் நடத்துகிறார்கள்! - விபுல் முத்கல்






Riot, Violence, Anarchy, Revolution, Cop, Insurgence







மொழிபெயர்ப்பு நேர்காணல்

டாக்டர் விபுல் முத்கல்

காமன் காஸ் அமைப்பின் இயக்குநர்.

அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரோ அமெரிக்கரின் இறப்பு, காவல்துறையின் கொடூரங்களை வெளிக்கொண்டுவந்துள்ளது என்று கூறலாமா?

அமெரிக்காவில் நடந்த அந்த அநீதியான நிகழ்ச்சிக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள்  ஒற்றுமையாக நடக்கின்றன. போராட்டத்தில் வெள்ளையர், ஆப்ரோ அமெரிக்கர், வயதானவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என பங்குபெறுகிறார்கள். இந்தியாவில் அப்படி போராட்டம் நடைபெறவில்லை. இதில் மத்தியதர நடுத்தர வர்க்கம் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இங்குள்ள காவல்துறையினர் பாகுபாடு கொண்டவர்கள் என்பதோடு ஏழைமக்களுக்கும் எதிரானவர்கள். இங்குள்ள மக்களுக்கு ஏழைகள், குடிசைவாசிகள் லாக்கப்பில் இறந்தால் கண்டுகொள்ள மாட்டார்கள்.

இன்று ஸ்மார்ட்போன்கள் பெருகியுள்ளதால், காவல்துறையினர் செய்யும் அநீதிகளை எளிதாக அறிய முடிகிறது என்று கூறமுடியுமா?

அமெரிக்காவில் நடந்த அநீதியை மாணவி ஒருவர் எடுத்த வீடியோதான் வெளியே கொண்டு வந்தது. ஆனால் இந்தியாவில் போலீசாரின் அடக்குமுறை, அநீதிகளை மக்கள் மௌனமாக ஏற்றுக்கொள்கின்றனர். புகார்கள் கிளம்பினால் அவர்களை திட்டுகிறார்கள். பொதுவாகவே போலீசார் குற்றவாளிகளை அடிப்பது தவறில்லை என்று இந்திய மக்கள் எண்ணுகிறார்கள். ஸ்மார்ட்போன்கள் இன்று அனைத்து துறைகளிலும் வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்துவிட்டன.

இந்தியாவில் காவல்துறையில் என்னென்ன மாற்றங்கள் செய்யவேண்டுமென நினைக்கிறீர்கள்?

காவல்துறையினர் மக்களுக்காக பணியாற்றவேண்டும். தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு பணியாளராக இருக்க கூடாது. அவர்கள் சட்டத்தைப் பொறுத்து மக்களிடம் பாகுபாடற்று நடந்துகொள்ளவேண்டும். மேலும் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலத்தில் 50 சதவீத காவல்துறை பணியிடங்கள் இன்றுவரை நிரப்ப படாமல் உள்ளன. இதனால் காவலர்களின் பணிச்சுமை தினசரி 14 மணிநேரம் என்று உயருகிறது. இந்திய மாநிலங்களிலுள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இணைய இணைப்பு, தொலைபேசி வசதி, வாகனங்கள் ஆகியவை கூட கிடையாது.

என்ன சீர்திருத்தங்கள் தேவை என்கிறீர்கள்?

காவல்துறையை மாநில அரசுகள் தம் கையில் வைத்துக்கொண்டு தமது தேவைக்கு பயன்படுத்திக்கொள்கின்றன. இதனால் நிறைய பயன்தரும் சட்டங்களைக் கூட நீர்த்துப்போக செய்துவிட்டார்கள். இதனால் காவல்துறையினருக்கும், மக்களுக்கும் கிடைக்கவேண்டிய பயன்கள் கிடைக்காமலேயே போய்விட்டன.

தான் மேற்கொள்ளும் செயல்பாடுகளை தன்னிச்சையாக அரசியல்வாதிகளின் தடையின்றி செய்யும் சுதந்திரம் காவல்துறையினருக்கு வழங்கப்பட வேண்டும். அதுவே காவல்துறையினருக்கு ஜனநாயகத்தன்மையை அளிக்கும்.

சிறுபான்மையினர் பற்றிய காவல்துறையினரின் எண்ணம் என்ன?

காவல்துறையினர் இஸ்லாமியர்களை அதிக குற்றம் செய்பவர்களாகவே கருதுவது நாங்கள் செய்த ஆய்வில் தெரிய வந்தது. காவலர்கள் இடம்பெயர் தொழிலாளர்களை எப்படி நடத்தினார்கள் என்று நாம்தான் டிவியில், நாளிதழ்கள் வழியாக பார்த்தோமோ? அவர்களையும் மோசமாகத்தான் நடத்துகிறார்கள். நடத்தினார்கள்.

காவல்துறையினர் வன்முறையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி உங்களது ஆய்வில் என்ன தெரிய வந்துள்ளது?

சிறியவகை குற்றங்களுக்கு நீதிமன்றங்கள் தேவையில்லை. அதனை போலீசாரே தண்டனை அளித்து தீர்த்துவைக்கலாம் என மக்கள் எண்ணுகின்றனர். ஐந்து போலீசாரில் ஒருவர் குற்றவாளிகளை நீதிமன்றம் மூலம் தண்டிப்பதை நாமே தண்டிக்கலாம் என்று எண்ணுகின்றனர்.

போலீசாரின் வன்முறையை பதிவு செய்யும் முயற்சி எப்படி செல்கிறது?

உச்சநீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகளை நிறைய மாநிலங்கள் கடைபிடிக்கவில்லை என்பது உண்மைதான். போலீசார் கேமராக்களை சுவற்றில் பதித்துவருகின்றனர். நிறைய நாடுகளில் போலீசாரின் சட்டைப்பையில் கேமராக்களை பதிக்க சொல்லி உத்தரவு உள்ளது. அக்கேமராக்களுடன்தான் அவர்கள் குற்றவாளிகளை விசாரிக்க வேண்டும். பொதுமக்களுடன் பேசவேண்டும்.

 டைம்ஸ் ஆப் இந்தியா

கேடக்கி தேசாய்






கருத்துகள்