பொறுப்புகளை உணர வைக்கும் காதல் மின்சாரம்! - கரண்ட்





Current BGM | DSP | Sushanth - YouTube



கரன்ட் 

இயக்கம் பல்நாடி சூரிய பிரதாப்

கதை ஸ்ரீனிவாச ராவ், சின்தலப்புடி


ஒளிப்பதிவு விஜயகுமார் சி

இசை  டிஎஸ்பி



இந்த நிமிஷம் முக்கியம் என்று வாழ்பவனின் வாழ்க்கையில் வரும் காதல் அவனது வாழ்க்கையை மாற்றுகிறது. ஆனால் காதல் அவனது கையைவிட்டு போய்விடுகிறது. இந்த நிமிடத்தில் இறுதியில் என்ன ஆனது?

படிப்பு, விளையாட்டு, காதல், வேலை என எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத இளைஞன் சுசாந்த். சர்வே டிபார்ட்மெண்டில் வேலை செய்யும் அவனது அப்பாவுக்கு ஆறுமாதங்களுக்கு ஒரிடத்தில் வேலை இருக்காது. இந்த நிலையில் சுசாந்த் பார்க் ஒன்றில் ஸனேகாவை பார்க்கிறான். பார்த்தவுடனே பிடித்துவிடுகிறது. பின்னே ஐஸ்வர்யாவின் தங்கச்சி போல இருந்தால் போதாதா? இந்த நிலையில் அவன் கல்லூரிக்கு போக அங்கும் ஸ்னேகாக அவனது வகுப்பிலேயே இருக்க, முடிந்தவரை அவளை சந்தித்து பேச முயல்கிறான். ஆனால் அவள் அவனுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை. இதனால் ஒரு டிராமா போட்டு மனதைக் கவருகிறான். ஆனால் அவனின் இயல்பே, எதையும் சீரியசாக எடுத்துகொள்ளாத துதான். 

இந்த நிமிஷம் முக்கியம் என்பதுதான் அவனுடைய மந்திரம். நீதிபதியின் மகள் ஸ்னேகா. அவளின் அப்பாவைப் பார்க்க வரச்சொல்லும்போது, அதை ஜாலியாக மறந்துவிட்டு கிரிக்கெட் விளையாடுபவன், தன் தவறை உணருவதில்லை. உணரும் போது காதல் கையில் இல்லை. என்ன ஆனது என்பதுதான் படத்தின் இறுதிக்காட்சி. 


ஆஹா
 
சுசாந்தின் அலட்டல இல்லாத இயல்பான நடிப்பும் காமெடியும்தான் படத்தை தாங்கிப்பிடிக்கிறது. இதில் வில்லன் என்று தனியாக யாரும் கிடையாது. ஒருவருக்கு இருக்கும் மோசமான பழக்கவழக்கங்கள்தான் அவர்களை மட்டுமல்லாது பிறரையும் பாதிக்கிறது. அதுதான் சுசாந்தின் வாழ்க்கையையும் மாற்றுகிறது. சினேகாவிற்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முயன்றிருக்கிறார். 

ஐயையோ

மகனுக்கும், மகளுக்கும் இந்தளவு சுதந்திரம் கொடுக்கமுடியுமா என ஆச்சரியம் ஏற்படுமளவு பெற்றோர் இருக்கிறார்கள். 

காதல் கரன்ட்!

கோமாளிமேடை டீம் 

கருத்துகள்