சமூகவலைத்தளங்களை கலக்கும் அனிமேஷன் ஆப்! - ட்வீன்கிராப்ட்
இந்தியாவைக் கலக்கும் அனிமேஷன்
ஆப்!
ட்வீன்கிராப்ட் என்ற அனிமேஷன்
ஆப்தான், இப்போது இணைய உலகில் அதிகமாக அனிமேஷன், மீம்ஸ் தயாரிக்க பயன்பட்டு வருகிறது.
இதன் எளிமையான செயல்பாடுதான் இதன் பிரபல்யத்திற்கு காரணம்.
கதை உங்களுடையதாக இருக்கலாம்.
அல்லது பக்கத்து வீட்டுக்கார ருடையதாக இருக்கலாம். வரையத் தெரிந்தால் போதும். அழகாக
தீட்டி அனிமேஷன் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட முடியும். நையாண்டிப் பதிவுகள்,
லாக்டௌள் பிரச்னைகள் என நேரத்திற்கு தகுந்தாற்போல பல்வேறு பதிவுகள் இணையத்தில் வந்துகொண்டிருக்கின்றன.
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என பல்வேறு சமூக வலைத்தளங்களில் ரசிக்கப்பட்டு பிரபலமாகி
உள்ளது. பெங்ளூருவைச் சேர்ந்த கல்பகிருதி என்ற நிறுவனம், இதனை வடிவமைத்துள்ளது. சோனி
சாகு, தினேஷ் சென் ஆகிய இருவரும்தான் இதனை நான்கு ஆண்டுகள் பாடுபட்டு உழைத்து உருவாக்கியவர்கள்.
நாங்கள் இன்டெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தோம். ட்வீன்கிராப்ட் ஆப்பைப் போல கிறுக்குத்தனமாக
யோசித்து அந்த வேலையைவிட்டு விட்டோம். இருவரும் சேர்ந்து ஆப்பை மேம்படுத்தி வந்தோம்.
பௌத்த துறவிகள் போல வாழ்ந்துகொண்டு பணமின்றி இந்த ஆப்பை உருவாக்கினோம் என்கிறார்கள்
இருவரும். இருவரிடம் பணமில்லாத சூழலில் மிகச்சில ஆட்களை மட்டுமே கொண்டு ஆப்பின் கோடிங்கை
எழுதி உருவாக்கியிருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் உருவான ஆப்பை இப்போது தினசரி
300 பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். முதலில் இதனை 200 பேர் தரவிறக்கிய நிலைமை மாறி
இன்று 6 ஆயிரம் பேர்களுக்கும் மேல் தரவிறக்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆப்பை
நீங்களும் விலையின்றி பயன்படுத்தலாம். இன்னும் சில மாதங்களில் இந்த ஆப்பில் விளம்பரங்கள்
வரக்கூடும். இதனை மக்கள் தரவிறக்க உதவி செய்தவர் ரெட் எஃப்எம் ரேடியோ ஜாக்கியான பிரவீன்
என்பவர்தான்.
நம் வாழ்க்கையிலிருந்தானே
உலகை மகிழ்விக்கும் கருத்துகள் கிடைக்கும். இதனை பயன்படுத்துபவர்கள் அப்படித்தான் அனைத்து
வீடியோக்களையும் , மீம்ஸ்களையும் உருவாக்கி வருகிறார்கள். சமையல் அறையில் பெண்கள் பேசுவது,
அவர்களின் ஷாப்பிங் பழக்கத்தை அப்பா கிண்டல் செய்வது, சமூகத்தில் உள்ள நம்பிக்கைகளை
பகடி செய்வது என ஏராளமான வீடியோக்களும் மீம்ஸ்களும் புகழ்பெற்று வருகின்றன. யூடியூபிலும்
ட்வீன்கிராப்டிற்கான வீடியோபக்கம் இருக்கிறது. அதனைப் பயன்படுத்தி ஆப்பை பற்றி கற்றுக்ளகொள்ளலாம்.
தி இந்து ஆங்கிலம்
பிராபலிகா எம் போரா
கருத்துகள்
கருத்துரையிடுக