போர்ச்சுக்கல் டு ஹைதராபாத்துக்கு வரும் பழிவாங்கும் படலம்! - பைசா வசூல்
பைசா வசூல் |
பைசா வசூல்
இயக்கம் பூரி ஜெகன்னாத்
ஒளிப்பதிவு
இசை அனுப் ரூபன்ஸ்
காதலியின் கொலைக்கு பழிதீர்க்க
ஹைதராபாத் வரும் ரா ஏஜெண்ட்டின் ரத்தப்படலம்தான் பைசா வசூல்.
ஹைதராபாத்தில் பாப் மார்லி
என்ற ரவுடி கும்பல்தான் பெரிய கை. அனைத்து இடங்களிலும் ரகளை செய்து ரத்தக்களறி செய்துகொண்டிருக்கிறார்கள்.
அப்போது அங்கு வரும் தேடா சிங் என்பவர் அனைவரையும் பந்தாடுகிறார். அண்டர்கவர் ஆபரேஷனில்
அவரைக் கவனிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அவரை வைத்து ரவுடிகளை கொல்ல திட்டமிடுகிறார்.
அதேசமயம் தேடாசிங் பலவந்தமாக புகுந்து தங்கும் வக்கீல் ஒருவரின் வீட்டருகே உள்ள பெண்
தன் அக்காவைத் தேடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு தேடாசிங் உதவுகிறார். எதற்கா அந்த
உதவியை அவர் செய்கிறார் என்பதே கதை.
ஆஹா
ஜெய் பாலய்யா என்று சொல்லி
பார்க்கவேண்டிய படம். படம் முழுக்க பாலைய்யாவின் நடிப்பும், தில் பேச்சும், தெனாவெட்டான
உடல்மொழியும்தான் படத்தை பார்க்கவைக்கிறது. பிற படங்களைப் போல் அல்லாமல் இந்த படம்
முழுக்க இறங்கி நடித்திருக்கிறார். பெண்களை மிரட்டுவது, பயமுறுத்துவது என பாலைய்யா
வேறு லெவலில் பூரியின் படத்தில் தெரிகிறார். போர்ச்சுகல் காட்சிகள் மிரட்டலும் கெஞ்சலுமாக
அவர் ஷிரியா சரணிடம் பேசுவது அழகு. அனுப் ரூபனின் இசை கேட்பதற்கும் சரி, பார்ப்பதற்கும்
நன்றாக இருக்கிறது. ஒருபாடலுக்கு ஆடி வந்த தைரா தத்துக்கு போலீஸ் கதாபாத்திரம். அழகு
திமிறுகிறது. ஹாரிகாவாக வரும் முஸ்கன் சேதி பாடலுக்கான டெடிகேட் மட்டுமே.
ஐயையோ
ரா ஏஜெண்ட்டை அவ்வளவு சீக்கிரம்
இந்திய அமைப்புகள் விட்டுக்கொடுத்துவிடுமா என்ன?தேசபக்திக்கான நேர்காணல் ஐய்யோ சென்னகேசவா
என்று கதற வைக்கிறது.
பாலைய்யா ரசிகர்களுக்காக...
கருத்துகள்
கருத்துரையிடுக