காதலியின் நாய்க்குட்டியை மீட்க காதலன் நடத்தும் போராட்டம்! - எக்ஸ்பிரஸ் ராஜா
எக்ஸ்பிரஸ் ராஜா 2016
இயக்கம் மெர்லபாகா காந்தி
திரைக்கதை: ஷேக் தாவூத்
ஜி, மெர்லபாகா காந்தி
ஒளிப்பதிவு: கார்த்திக்
கட்டமனேனி
இசை பிரவீன் லக்காராஜூ
காதலியின் சில்க்கி என்ற
நாயை கார்ப்பரேஷன்காரர்களிடம் ராஜா பிடித்துக்கொடுத்துவிடுகிறான். அந்த நாய் பலரின்
கைமாறி, பினாமி பிரிட்டிஷ் என்பவரின் வீட்டுக்கு வந்துவிடுகிறது. அவரின் வீட்டிலிருந்து
அந்த நாயைக் கடத்த ராஜா திட்டமிடுகிறான். அந்த கடத்தல் முயற்சி பலரது வாழ்க்கையை மாற்றுகிறது.
அதன் விளைவாக ராஜா, பலரின் எதிர்ப்பை சம்பாதிக்கிறான். இந்த நேரத்தில் காதலிக்கு வேறு
ஒருவரோடு திருமணம் நிச்சயமாகிறது. அதை ராஜாவால் நிறுத்த முடிந்ததா? பணம் கையாடல் செய்ததாக
கைது செய்யப்பட்ட ராஜாவின் அப்பா என்னவானார்? என்ற கேள்விகளுக்கு பதில் தேடித்தான்
படம் நகர்கிறது.
ஆஹா
படம் முழுக்க சர்வானந்த்,
பிரபாஸ் சீனு, பிரம்மாஜி, தன்ராஜ், சப்தகிரி, பிரித்விராஜ், சகலகலா சங்கர் ஆகியோரின்
நடிப்பும், காமெடியும்தான் படத்தை தூக்கி நிறுத்துகிறது. அம்முவுக்கு, ராஜா காதலைச்
சொல்லுவது நன்றாக இருக்கிறது. கதை சொல்லும் முறையும் ரசிக்கும்படி இருக்கிறது. நாயை கடத்திச்செல்லும்போது
வேனில் இடரும் கற்கள், பலரின் வாழ்க்கையையே மாற்றிப்போடுகிறது. படத்தின் முக்கிய கதாபாத்திரம்,
தன்ராஜ்தான். படத்தின் முக்கிய தருணங்களை இவரது கைகளே உருவாக்குகிறது. இயக்குநரின் காமெடி திறமை படம் முழுக்க நம்மை வியப்புக்குள்ளாக்குகிறது.
அம்முவை ராஜா கல்யாணம் செய்துகொள்வாரா என்ற பதற்றம் பார்வையாளர்களுக்கு ஏற்படாது. அந்தளவு அனைத்து பாத்திரங்களும் நம்மை ஜாலியாகவே வைத்திருக்கின்றனர். ஊர்வசிக்கான மனநல மருத்துவம்.. அநியாயம். இப்படியா மூளைக்கோளாறுகளை சரி செய்வார்கள். படம் முழுக்க ஜாலியாக இருப்பதால், ராஜா தன் அப்பாவை மீட்க பேசும் பேச்சு நம்பிக்கை ஏற்படுத்துவதாகவே இல்லை.
காமெடி எக்ஸ்பிரஸ்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக