புற்றுநோயுடன் போராடும் ரஜினி ரசிகனும், அவனின் சாகாத காதலும்! - தில் பேச்சாரா 2020
புற்றுநோய் வந்த இருவரின் காதல்தான் கதை |
தில் பேச்சாரா (இந்தி) 2020
இயக்கம் முகேஷ் சப்பாரா
திரைக்கதை சஷாங்க் கைத்தான், சுப்ரோதிம் சென் குப்தா
ஒளிப்பதிவு சத்யஜித் பாண்டே
இசை ஏஆர்ஆர்
இரண்டு புற்றுநோயாளிகளுக்கு
இடையில் ஏற்படும் மென்மையான காதலும், வலிமையான உணர்ச்சிகளும்தான் கதை.
உடல் இறந்தாலும் மனதில் ஈரமாக உள்ள அன்பைத்தான் படம் வலியுறுத்துகிறது. |
இம்மானுவேல் ராஜ்குமார்
ஜூனியர், எலும்பு புற்றுநோய் நோயாளி. ஆனால் அதன் சுவடுகளே தெரியாமல் ஜாலியாக ஆட்டம்,
பாட்டம் என்று சுற்றிக்கொண்டிருப்பவன். அவனுக்கு எதிர்ப்பதமாக சோகமே உருவாக உடல்நலம்
பாதிக்கப்படுகிறதே என அபிமன்யூ வீரின் இசையைக் கேட்டு வாழ்ந்துகொண்டிருப்பவள் கிஸி
பாசு. இவளுக்கு தைராய்டு புற்றுநோய். உடலோடு எப்போது ஆக்சிஜன் சிலிண்டர் இருக்கும்.
இந்த இருவரும் கல்லூரியில் நடக்கும் விழா ஒன்றில் ஒருவரையொருவர் பார்க்கின்றனர். கிஸி
பாசுவைப் பார்த்தவுடனே இம்மானுவேலுக்கு மணி அடித்து லைட் எரிந்து இன்னும் என்னென்னவெல்லாமோ
ஆகிறது. ஆனால் இம்மானுவேல் என்கிற மேனியை தவிர்க்கவும் முடியவில்லை. காரணம், இடைவிடாமல்
பேசியே கிஸி பாசுவை காதலிக்க வைக்கிறான். இருவரையும் அபிமன்யூ வீர் என்ற தனியிசை பாடகன்
ஒன்றாக இணைத்து வைக்கிறான். அவரின் முழுமையடையாத பாடல் பற்றிய பேச்சு அவர்களை பாரீஸ்
நோக்கி செல்லவைக்கிறது. அதுதான் அவர்களது வாழ்க்கையை மாற்றுகிறது அந்த பயணத்திற்கு
முன்னரே கிஸி மூச்சுவிட முடியாமல் கஷ்டப்பட்டு உயிர் பிழைக்கிறாள். அபிமன்யூ ஏன் கடைசி
பாடலை முடிக்கவில்லை. கிஸி அந்த பாடலை ஏன் அவ்வளவு முக்கியமாக கருதவேண்டும் என்ற அனைத்து
கேள்விகளுக்கும் படத்தில் இறுதியில் பதில் உள்ளது.
வலி நிரம்பிய வாழ்க்கையில் அற்புதமான வாழ்க்கை அனுபவங்கள்தான் கதை. |
ராஜ்புத் சிங்கின் உற்சாகமான
உடல்மொழியும், ரஜினி போன்று ஆகவேண்டும் என குறும்படத்தில் நடிப்பது ஆகட்டும் பின்னுகிறார்.
நிஜத்தில் தற்கொலை செய்துகொண்டார். படத்தில் ஆஸ்டியோ சர்கோமா என்று எலும்பு புற்றுநோயால்
பாதிக்கப்பட்டு இறந்துவிடுகிறார். என்றாலும் படத்தில் அவர் வரும் அனைத்து காட்சிகளுமே
புத்துணர்ச்சியுடன் அவரது நடிப்பை பார்க்க முடிகிறது. சஞ்சனா சாங்கி கோபம், காதல்,
விரக்தி என அத்தனை உணர்ச்சிகளையும் அழகாக வெளிப்படுத்துகிறார்.
படத்தில் வரும் மற்றொரு
பாத்திரமாகவே ஏஆர்ஆரின் இசை மாறியிருக்கிறது. சோகம், உற்சாகம், விரக்தியான சூழல் என
அனைத்திலும் நம்மோடு பயணிக்கும் இசை, எதிர்பார்க்காத விருந்து என்றே சொல்லவேண்டும்.
2012இல் ஜான் க்ரீன் எழுதிய
தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் நாவல்தான் திரைப்படமாக மாற்றப்பட்டிருக்கிறது.
படம் பார்க்க நண்பர்கள் அழைத்தால் செரி சொல்லி ஒப்புக்கொள்ளுங்கள்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக