உடலில் அரிப்பு ஏற்படுவது இந்தகாரணத்தால்தான்! - மிஸ்டர் ரோனி



Disease, Medicine, Health, Medication, Pain, Tablet




மிஸ்டர் ரோனி

உடலில் அரிப்பு ஏற்படுவது எதனால்?

உடல் செல்களில் ஒவ்வாமை அல்லது தேனீ கொட்டுவது, எறும்பு கடிப்பது போன்ற செயல்களின்போது நாம் தோலை வேகமாக சொரிகிறோம். காரணம், செல்களில் சுரக்கும் ஹிஸ்டாமைன் என்ற டிரான்ஸ்மிட்டரே இதற்கு காரணம். செல்லிலுள்ள இந்த வகை பொருளே மூளைக்கு தகவல் கொடுத்து குறிப்பிட்ட இடத்தில் அரிப்பதற்கான தன்மையை ஏற்படுத்துகிறது.

கண்களை சிமிட்டுவது எதற்கு?

காதலைச் சொல்ல, சில்மிஷங்களை மறைக்க என பல ஜெகஜால வேலைகளுக்கு கண்களை நாம் சிமிட்டுகிறோம். இமைப்பது தானியங்கி செயல்பாடு. உண்மையில் கண்களை நாம் இமைப்பது கண்களிலுள்ள ஈரம் வற்றாமல் இருக்கவும், தூசிகள் உட்புகாமல் தடுப்பதற்கும்தான். ஒருவகையில் கண்கள் சுத்தமாக இருப்பதற்கு கண்சிமிட்டுதல் உதவுகிறது.

விபத்தில் கை, கால் உள்ளிட்ட உறுப்புகளை இழந்தவர்களுக்கு வலி ஏற்படுமா?

உறுப்புகளை இழந்திருக்கலாம். ஆனால் அதற்கான நரம்புகள் அங்குதானே இருக்கும். எனவே கண்டிப்பாக அவர்களுக்கு வலி தோன்றும். காரணம் அங்குள்ள நரம்பு செல்கள் மூளைக்கு உறுப்பு காணோமே ப்ரோ என அடிக்கடி டேட்டாபேக் தீர்ந்த போனாக சிக்னல் கொடுக்கும். இதனால் அவர்களுக்கு வலி ஏற்படும். இதனை சரி செய்ய முடியாது. வலி பழகும்வரை அதனை மறக்க மருந்துகளை சாப்பிடலாம்.

நமது உடலில் ஒரு பாதத்தை விட மற்றொரு பாதம் பெரிதாக இருப்பது உண்மையா?

கால் பாதம் மட்டுமல்ல நமது உடலில் இருபாகங்களும் ஒரே அளவில் இருக்காது. எதனால் இந்த வேறுபாடு?

நாம் ஒரு செல்லில் இருந்து பெருகினாலும் கூட பல்வேறு அமைப்பு வேறுபாடுகள் அதில் ஏற்பட்டுவிடுகின்றன. இதனால் உடலிலுள்ள பல்வேறு உறுப்புகள் பல்வேறு அளவில் இருக்கும். நுணுக்கமாக பார்த்தால் இந்த வேறுபாட்டை அறியலாம்.

 பெற்றோரின் அடையாளங்கள், குணங்கள் என பல்வேறு விஷயங்கள் குழந்தைகளுக்கு இல்லாமல் இருக்கும் சூழல் உண்டா?

நிச்சயம் உண்டு. காரணம் மரபணுக்கள் செட்டு செட்டாகவே இயங்கும். அப்பாவின் அணு பலவீனமாக, அம்மாவின் மரபணு அசுரவலிமை இருந்தால் அம்மாவின் தன்மை குணங்கள் பிள்ளைகளுக்கு வந்து சேரும். இரண்டுபேருமே அடக்கமோ அடக்கம் என்று உள்ள மரபணுக்களை கொண்டிருந்தால் பிள்ளைகளுக்கு இந்த பண்புகள் கடத்தப்படுவது மாறுபடும்.


கருத்துகள்