நியூஸ் ஜாம்: உலக சுகாதார நிறுவனத்திலிருந்து விலகுகிறது அமெரிக்கா!
நியூஸ்ரூம்!
அட!
பாப்கட் செங்கமலம்!
தமிழ்நாட்டிலுள்ள மன்னார்குடியில் கோபாலசாமி கோவிலுள்ள யானையைத் தான் இப்படி அழைக்கிறார்கள். வனத்துறை அதிகாரி சுதா ராமன், பதிவிட்ட செங்கமலத்தின் பாப்கட்தான் சமூக வலைத்தளங்களி அதிரிபுதிரி ஹிட்டாகியுள்ளது. 2003ஆம் ஆண்டு கேரளத்திலிருந்து கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட யானை இது. இதற்கு பாப் ஸ்டைல் முடியை, பாகன் ராஜகோபால் உருவாக்கியுள்ளார்.
நியூஸ்மினிட்
ஐயையோ!
பிரிவு!
அமெரிக்கா, உலக சுகாதார நிறுவனத்திலிருந்து முறைப்படி பிரிந்துசெல்வதற்கான செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது. முன்னமே, அமெரிக்க அதிபர் டிரம்ப் விலகும் முடிவை அறிவித்துவிட்டார். தற்போது விலகுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கினாலும் முழுமையாக விலகுவது அடுத்த ஆண்டு ஜூலை மாதம்தான். இதற்கு அமெரிக்காவிலுள்ள பல்வேறு சுகாதார அமைப்புகள், தன்னார்வலர்கள், எழுத்தாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சிஎன்என்
அப்படியா?
சீனா, ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை தடாலடியாக அமல்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து அந்நாட்டு மக்கள் அங்கு போராடி வருகின்றனர். மக்கள் பற்றிய விவரங்களை ஹாங்காங் அதிகாரிகள் கேட்பதற்கு கூகுள், மைக்ரோசாப்ட் டெக் நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றன. தேசிய பாதுகாப்பு சட்டம் பற்றி ஆராய்ந்து வருவதால் நாங்கள் பயனர் விவரங்களை வழங்குவது பற்றி ஆலோசித்து வருகிறோம் என்று பதில் கூறியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.
யுபிஐ
ஓஹோ
ஆய்வு!
அன்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டிகள் இருப்பை ஆய்வு செய்வதற்கு ஐரோப்பா விண்வெளி நிறுவனம் மற்றும் நாசா முயன்று வருகின்றன. இதற்கு செயற்கைக்கோள் உதவிகளை நாடியுள்ளன. ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கிரையோசாட்-2, நாசாவின் ஐஸ்சாட்-2 ஆகிய செயற்கைக்கோள்கள் முறையே 720 கி.மீ., 500 கி.மீ. தூரம் என அன்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகளை அளவிட்டு அதன் அடர்த்தியை பதிவு செய்துள்ளன.
பிபிசி
4G internet balloons take off over Kenya
பிபிசி
படச்செய்தி
பதினாறு வாரங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பாரிசின் லோவ்ரே அருங்காட்சியகத்தில் குவிந்த மக்கள் கூட்டம். இடம்: பாரிஸ், பிரான்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக