சீனாவுக்கு இந்தியா புதிய முறையில் அழுத்தங்களை கொடுத்து வருகிறது! - ராம் மாதவ், பாஜக பொது செயலாளர்










Dragons, China, Thailand, Ornament, Architecture





ராம் மாதவ்

பாஜக பொது செயலாளர்

கோவிட் -19 பெருந்தொற்றுக்குப் பிறகு இந்தியா எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

இந்தியா பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளில் இந்தியா சக்திவாய்ந்த நாடாக உள்ளது. முக்கியமான நாடாக உருவாகி வளர வாய்ப்புள்ளது. இக்காலத்தில் ஐ.நா அமைப்பு உருவாகி 75 ஆண்டுகள் ஆகியுள்ளது. கோவிட் -19 பிறகு இத்தகைய அமைப்புகளின் செயல்பாடுகளும் மாறுதலுக்க்கு உள்ளாகும் என்பதில் மாற்றமில்லை.

இந்தியா – சீனா எல்லையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா?

2017 டோக்லாம் முதல் இன்று கால்வான் பள்ளத்தாக்கு வரையில் இந்தியா தனது செயல்பாட்டில் மாற்றங்களைச் செய்து வந்துள்ளது. சீனா, எல்லையில் தாக்குதல் நடத்துவது ஒன்றும் புதிதல்ல. முன்பிருந்தே அந்நாடு எல்லையில் இந்தியாவை தாக்கி வந்துள்ளது.

இந்தியா, சீனாவோடு நடத்திய பேச்சுவார்த்தையின் தோல்வி என்று இதனை கூறலாமா?

இந்தியா சீனாவோடு கடந்த காலகட்டங்களி எல்லைப் பிரச்னைகள் ஏற்பட்டபோது கூட நல்லுறவையே பேணி வந்திருக்கிறது. குறிப்பாக 1986 ஆண்டுகளுக்குப் பிறகு. அப்போது பிரதமர் ராஜீவ்காந்தி, சீனாவுக்கு சென்று அன்றைய சீன அதிபரான டெங் ஜியாபிங்கை சந்தித்து பேசினார். சீனா பேச்சுவார்தைகளையும் தாண்டி எல்லையில் பிரச்னை செய்தால், அதனை வழிக்கு கொண்டு வர நாங்கள் வேறுவகையிலான அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம்.

பிறகு நடவடிக்கைகள் எங்கு தவறானது?

கடந்த ஆறு ஆண்டுகளாக எல்லைப்பகுதியில் இந்திய முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அடிப்படை வசதிகளை செய்து வந்திருக்கிறது. சீனாவிலும் அரசியல் நிலைமைகள் மாறியுள்ளன. அவர்களின் கம்யூனிஸ்ட் கட்சி, சில குறிப்பிட்ட குடும்பங்களின் ஆதிக்கத்திற்குள் வந்துள்ளது. எனவே, அவர்கள் நாட்டின் முன்னேற்றமாக சில நடவடிக்கைகளை எடுக்க முயல்கின்றன்ர. இந்தியா எல்லைப்பிரச்னை சம்பந்தமான கொள்கை, அடிப்படை வசதிகள் என பலவற்றிலும் முன்னேறியுள்ளது. அதனால்தான் சீனப்படைகள் எல்லையில் இருந்து விலகாதவரை இந்தியப்படைகளும் விட்டுக்கொடுக்காமல் அங்கேயே நின்றன.

அரசு எடுத்த சீனத்துக்கு எதிரனா நடவடிக்கையில் அந்நாட்டின் பெயரைக்குறிப்பிடாமல் செய்யவேண்டிய அவசியம் என்ன?

இந்திய அரசு சீன ஆப்ஸ்கள் பற்றி மட்டும்தான் நடவடிக்கை எடுத்துள்ளது. சீன பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்பதைப் பற்றி அரசு அதிகாரப்பூர்வமாக ஏதும் அறிவிக்கவில்லை. அதனைப் பயன்படுத்துவது பயன்படுத்தாமல் இருப்பது மக்களின் விருப்பத்திற்கு உட்பட்டது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்