எதிரிகளை அழித்து மக்களின் காவல் தெய்வமாக மாறும் பாலைய்யா! - அதிநாயகடு
அதிநாயகடு 2012
இயக்கம்:
பருச்சாரி முரளி
ஒளிப்பதிவு: டி.சுரேந்திர ரெட்டி
இசை: கல்யாணி மாலிக்
கூலிக்கு கொலை செய்யும் சரண்ராஜிடம் இருக்கிறார் பாலைய்யா.
மந்திரி மகன் செய்யும் வல்லுறவு கொலை ஒன்றுக்காக டிவி சேனல் நிருபர் போல சென்று அவர்களைத்
தண்டிக்கிறார். அப்போது சரண்ராஜின் போனுக்கு செய்தி ஒன்று வருகிறது. அந்த செய்தியை
பாலைய்யா கேட்டுவிட்டார் என சரண்ராஜ் தானாகவே ஆத்மஹத்தி செய்துகொள்கிறார். போனுக்கு
வந்த செய்தி என்ன, யார் அனுப்பியது என்று அறிய பாலைய்யா முயல்கிறார்.
அதில் அவருக்கு தெரிய வரும் முக்கியமான விஷயம், சக்திவாய்ந்த
குடும்பம் ஒன்றின் வாரிசு அவர் என்ற உண்மைதான். ஆனால் அவரின் அப்பா அவரை வீட்டுக்குள்
விட மறுக்கிறார். என்ன காரணம் என்பதுதான் படத்தின் இறுதிக்காட்சி
ஆஹா
பாலைய்யாவின் கூலிக்கு கொலை செய்யும் வேலையில் கூட நீதி நேர்மை
பார்த்துக்கொல்கிறார் என்பதுதான். அவரின் நடிப்பு, காமெடி, நெகிழ்ச்சியான நடிப்பு என
அனைத்தும் நன்றாக இருக்கிறது. சீனியர் பாலைய்யா அடக்கமான நடிப்பு, ஆக்ரோஷமான சண்டை
என அதிவேகம் காட்டுகிறார். படத்தின் தலைப்பு அவருக்குத்தான சமர்ப்பணம். பிரம்மானந்தத்தின்
நிறைய இடங்களில் சிரிக்க வைக்கிறது.
ஐயையோ
பாலைய்யாவின் வயதான உருவம் நிறைய இடங்களில் உறுத்துகிறது.
குறிப்பாக சுகன்யா அவரை தன்னுடைய மகன் என்று சொல்லும்போது, ஐயையோ என மனம் பதைபதைக்கிறது.
அடுத்து, அவர் லஷ்மியுடன் ஆடும் குத்தாட்டும், ஐயோ ராமா என்னை ஏன் இப்படி சோதிக்கிறே
என்று சொல்ல வைக்கிறது. பாலைய்யா ஓரளவு விவரம் தெரிகிற வயதில் கடத்தப்படுகிறார். ஆனால்
அவரது தாத்தாவை பற்றி ஏதும் தெரியாமல் இருப்பது எப்படி சாத்தியம்? அவரை எப்படி அவர்
கொல்லுவார்? என்ற லாஜிக் கரும்பாறை போல நம் தலைமீது முட்டுகிறது.
ஆந்திரத்தின் பெருமை, தேசப்பற்று, மக்களின் வாழ்க்கை என நிறைய
வசனங்கள் பேசப்படுகிறது. பாலைய்யா இதில் மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார். அதற்காக
நீங்கள் பார்க்கலாம்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக