நியூஸ் ரூம்: பிறநாட்டு மாணவர்களே வெளியேறுங்கள்- அமெரிக்கா








படம்: அல்ஜசீரா. கீழே படச்செய்தி பார்க்க...


அப்படியா?

அமெரிக்க அரசின் குடியேற்றத்துறை, அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களை தங்கள் நாடுகளுக்கு செல்ல உத்தரவிட்டுள்ளது. M1,F1 விசாக்களைப் பெற்று அமெரிக்காவில் படிப்பவர்கள் பாடங்களை குறைத்துக்கொண்டு அல்லது மருத்துவ விடுப்பில் தங்களுடைய நாடுகளுக்கு திரும்பவேண்டும் என குடியேற்றத்துறை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வியை அமெரிக்க அரசின் உத்தரவு பாதிக்கும் என விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.

நியூஸ்மினிட்.

ஆஹா!

ஆன்லைன் கல்வி!

சென்னை உயர்நீதிமன்றத்தில் பெருந்தொற்று பிரச்னை தீரும்வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது. இவ்வகுப்புகள் மாணவர்களுக்கு கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும் என பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த நீதிமன்றம், ஆன்லைன் வகுப்புகளுக்கு தடைவிதிக்க முடியாது என்று கூறியது. மேலும், மத்திய அரசு ஆன்லைன் கல்விக்கான விதிமுறைகள் வரும் ஜூலை பதினைந்தாம் தேதி அறிவிக்கப்படவிருக்கின்றன என்பதையும் உயர்நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.

நியூஸ்மினிட்

ஐயையோ!

பாதுகாப்பு சட்டம்

சீனா அண்மையில் தேசிய பாதுகாப்புச்சட்டம் ஒன்றை இயற்றி, ஹாங்காங்கை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்றது. “சீனா, உலக நாடுகளின் நம்பிக்கையைப் பெறாமல் கேள்வியை எதிர்கொள்ளாமல் இருந்துவிட முடியாது” என இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை டொம்னிக் ராப்  கூறினார். இதற்கு சீனத்தின் இங்கிலாந்து தூதர், இங்கிலாந்து உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது தவறு என்று பதிலடி கொடுத்துள்ளார். இங்கிலாந்து, தேசிய பாதுகாப்பு சட்டத்தால் தங்கள் ஹாங்காங்கிலிருந்து வெளியேறிய குடிமக்களுக்கு தனது நாட்டில் குடியுரிமை வழங்க முடிவு செய்தது. இதனால் சீனாவுக்கும் இங்கிலாந்துக்கும் மோதல் வெடித்தது.

புதுமை!

குளத்தில் ஏடிஎம்!

அமெரிக்காவின் நெப்ராஸ்கா நகரைச் சேர்ந்தவர், வின் ஹால். இவர் தன்னுடைய நிலத்திலுள்ள குளத்தைத் தூர்வாரும் போது அதில், ஏடிஎம் மெஷினைக் கண்டெடுத்து உள்ளார். அதனை முதலில் குளிர்சாதனப்பெட்டி என்று நினைத்தவர், பின்னர் ஏடிஎம் மெஷினை அடையாளம் கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். கொள்ளையர்களால் திருடப்பட்ட மெஷினா என துப்பறிந்துவருகிறது காவல்துறை.

Private trains: Companies will have freedom to decide on fare

Indian railways will give private firms the freedom to decide upon the fare to be charged from passengers as it is gearing up to get run 151 run trains across 100 routes, via public private partnership (PPP).

These companies will also have to the existing Indian Railway Passenger Reservation System for booking of tickets. However, a mechanism will be built in to transfer the revenue earned to an escrow account, according to the Project Information Memorandum Document (PIM) released by the national transporter.

 

படச்செய்தி

இந்தியாவிலுள்ள நாகலாந்து மாநிலத்தில் விவசாய வேலைகள் தீவிரமடைந்துள்ளன. இடம், மிமா, நாகலாந்து

 

 

கருத்துகள்