மென்பொருள் நிறுவனரை கொலை செய்ய துரத்தும் காஸ்மெடிக் வில்லன்! - பார்ட்டி




Party Telugu Full Length Movie || Allari Naresh, Shashank, Madhu ...



பார்ட்டி (2006)

இயக்கம்: ரவிபாபு

ஒளிப்பதிவு: சுதாகர் ரெட்டி

இசை: சக்ரி

ரவுடிக்கு தரவேண்டிய ஒரு கோடி ரூபாய் பணத்திற்காக இரண்டு இளைஞர்கள் செய்யும் தில்லாலங்கடி, உல்லுல்லாயி வேலைகள்தான் படம்.

கல்லூரியில் கேள்வித்தாளை பிரின்சிபாலின் கணினியிலிருந்து நைட்டோடு நைட்டாக திருடி ரவுடிக்கு கொடுத்து காசு சம்பாதிக்கிறார்கள் நரேஷ் கேங். இதில் பிரின்சிபால் எளிதாக இவர்களைக் கண்டுபிடித்துவிட, வேறுவழியின்றி கல்லூரியிலிருந்து வெளியேற நேருகிறது. அப்போது அண்டர்வேர் என்ற மென்பொருள் நிறுவனத்தில் நண்பனுக்கு வேலை கிடைக்கிறது. அவனை அறையில் கட்டிப்போட்டுவிட்டு, அவன் பெயரில் அக்கம்பெனிக்கு செல்கிறார்கள் நரேஷ், சஷாங்க். அங்கு சென்றால், அக்கம்பெனியை இன்னொரு கம்பெனிக்கு விற்க உள்நிறுவன சதி நடைபெறுகிறது. அதைத் தடுத்து நிறுவனத்தை காப்பாற்றி, முதலாளி பெண்ணை கைப்பிடித்து ரவுடியின் கடனை நரேஷ் அடைத்தாரா இல்லையா என்பதுதான் கதை.

ஆஹா

நரேஷ், சஷாங்க் காமெடி அதிரடிக்கிறது. கூடவே இயக்குநர் ரவிபாபுவும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். படம் முழுக்க வரும் கதாபாத்திரம் பிரம்மானந்திற்கு. கொடுத்த வாய்ப்பில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்திருக்கிறார். காமெடி படத்திலும் திரில்லர் சஸ்பென்ஸ் வைத்து அசத்தியிருக்கிறார் இயக்குநர்.

காமெடி படத்தில் அனைத்தும் மேஜிக்காக இருக்கும் என்று சொல்வார்கள். இந்தப்படத்தில் கிளைமேக்ஸில் நரேஷ் காதலியிடம் பேசும் வசனங்கள் பிரமாதமாக எழுதப்பட்டுள்ளன. பொதுவாக நான் உன்னை எப்படி காதலிக்கிறேன் என்பார்கள். இதில் நான் எப்படி உன்னை வேலை செய்யவிடாமல் மனைவியாக தாங்குவேன் என நெக்குருகி பேசுவார். முதலில் காமெடியாக தோன்றினாலும் காதலி மீதான காதல், அக்கறை கொண்ட வசனம் அற்புதம்.

ஐயையோ

நாயகி ஏதோ பாப் சிங்கர் போல இருக்கிறார். படத்தில் வித்தியாசமாக இருக்கிறது அவரது தலைமுடி அவரின் கண்ணையே அவரே பார்க்கமுடியாதபோது காதல் எங்கே வரும்?

காமெடி பார்ட்டி

கோமாளிமேடை டீம்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்