பீகாரில் பல்லாண்டுகளாக எந்த மாற்றமும் நிகழவே இல்லை! - யஷ்வந்த் சின்கா






Assembly Election Results 2018: Yashwant Sinha Blasts BJP ...









மொழிபெயர்ப்பு நேர்காணல்

யஷ்வந்த் சின்கா

பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் – பாஜகவிற்கு மாற்றாக மூன்றாவது கட்சியை உருவாக்கியுள்ளார். விரைவில் அங்கு தேர்தல் நடைபெறவிருக்கிற சூழலில் அவரிடம் பேசினோம்.

மூன்றாவது கட்சி உருவாக்கும் எண்ணம் எப்படி உங்களுக்கு வந்தது?

இந்தியா சுதந்திரமடைந்து 43 ஆண்டுகள் ஆகின்றது. ஆனாலும் பீகாரில் நிலைமை மாறவில்லை. அங்கிருந்து 43 லட்சம் தொழிலாளர்கள் வேலைக்காக பிற மாநிலங்களுக்குச் செல்கிறார்கள். நான் பீகாரைச் சேர்ந்தவன். பாட்னாவில்தான் படித்தேன். குடிமைப்பணித் தேர்வு எழுதி வென்றவன். பீகாரில் மாற்றங்கள் ஏற்படுவதற்காகவே நான் கட்சி தொடங்கியுள்ளேன். எனது குடும்பம், நண்பர்களின் விருப்பமும் அதுவாகவே இருந்தது

பீகாரில் என்ன பிரச்னை உள்ளது?

நிதிஷ்குமார், இங்கு பதினைந்து ஆண்டுகளாக முதல் அமைச்சராக உள்ளார். ஆனால் அனைத்து மாநிலங்களின் முன்னேற்றப்பட்டியலில் பீகார் பின்தங்கியே உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக பீகாரிலுள்ள கல்வி, சுகாதாரம், வேளாண்மை என எந்த முன்னேற்றமுமே இல்லையே?

தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கப் போகிறீர்களா? உங்களின் ஆதரவாளர்கள் யார்?

ஆம். பீகாரில் மாற்றத்தை விரும்பும் சிந்தனை கொண்ட சிறிய கட்சிகள் முதல் சுயேச்சையாக போட்டியிடும் அனைவரையும் மூன்றாவது கூட்டணியில் அரவணைக்க நான் தயாராக இருக்கிறேன். காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் என்னோடு ஏதும் பேசவில்லை. ஆனால் அவர்கள் எங்களோடு இணைய வந்தால் மகிழ்ச்சியோடு ஏற்போம்.

பாஜவிலிருந்து சத்ருகன் சின்கா கூட வெளியேறினாரே?

அவரின் மனதில் என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. பீகாரின் நலனுக்காக எங்களுடன் இணைய வருபவர்கள் அனைவரையும் வரவேற்போம்.

அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் கூட உங்களது அணியை ஆதரிப்பதாக கூறியுள்ளாரே?

அவரிடம் நான் ஏதும் பேசவில்லை. இனி பேசுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம்.

இந்தியாடுடே

விஜி அரோரா










கருத்துகள்