நியூஸ் ரூம்: புற்றுநோயை உருவாக்குகிறதா ஜான்சன் அண்ட் ஜான்சன் குழந்தைகள் பௌடர்!


Does Johnson & Johnson baby powder cause cancer?


அப்படியா?

தேர்வு ரெடியா?

பிளஸ் 2 தேர்வில் இறுதி தேர்வை எழுதாமல் விட்டவர்கள் ஜூலை 27ஆம் தேதி நடைபெறும் தேர்வில் பங்கேற்கலாம் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மார்ச் 24 அன்று நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை, கோவிட்-19 பொதுமுடக்கம் காரணமாக மாணவர்கள் தவறவிட்டனர். வலைத்தளத்தில் இம்மாதம் 13-17ஆம் தேதி வரையில் பெறலாம். அல்லது பள்ளியில் ஹால்டிக்கெட்டைப் பெறலாம். மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே இத்தேர்வு நடைபெறவிருக்கிறது.

நியூஸ்மினிட்

அடடே!

ஹெர்பல் மைசூர்பாகு!

கோவிட் -19 நோய்த்தொற்றை குணமாக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்ட ஹெர்பல் மைசூர்பாகு கடை, அரசு மூலம் மூடப்பட்டுள்ளது. கோவையில் ஸ்ரீராம் என்பவருக்கு சொந்தமான நெல்லை லாலா ஸ்வீட்ஸ் என்ற கடைதான், தவறான விளம்பரத்தால் மூடப்பட்டுள்ளது. கடையின் உரிமையாளர் ரகசியமான மூலிகைகளால் செய்யப்பட்ட மைசூர்பாகு கோவிட் -19 நோய்த்தொற்றை குணமாக்குகிறது என சமூகவலைத்தளங்களில் விளம்பரம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நியூஸ்மினிட்

ஆஹா

அனைவருக்கும் கல்வி!

கேரள அரசு, 2.42 லட்சம் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. அரசின் கல்வி ஒளிபரப்பு சேனல் மூலம் மாணவர்கள் பயில்வதற்காக தற்போதுவரை 20 ஆயிரம் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 2 ஆயிரம் தொலைக்காட்சிகளை அரசும், பிறவற்றை தனியார் அமைப்புகள் சமூக பொறுப்புணர்வுத்திட்டத்தின் கீழும் வழங்கியுள்ளன். நாட்டிலேயே முதல் மாநிலமாக கேரளம், ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

ஓஹோ!

பௌடர் ஆபத்து!

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறூவன பௌடர் விற்பனையை தடை செய்ய 170க்கும் மேற்பட்ட தன்னார்வ நிறுவனங்கள் போராடி வருகின்றனர். இந்நிறுவனத்தின் குழந்தைகள் பௌடரில் புற்றுநோயை உருவாகும் ஆஸ்பெஸ்டாஸ் வேதிப்பொருள் இருப்பதே தடைக்கு காரணமாக எதிர்தரப்பின்ர் முன்வைக்கின்றனர். அமெரிக்கா, கனடாவில் ஜான்சன் பௌடர் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டது. பிறநாடுகளில் தடையின்றி விற்பனையாகி வருகிறது.

அல்ஜசீரா

Baby raptor discovered in Alaska

Paleontologists may have identified a new species of dinosaur that lived, mated and nested in the Arctic 70 million years ago.Analysis of the tip of a fossilized jawbone, just 14 millimeters long, found in northern Alaska, showed that the creature was a type of dromaeosaurid, a group of predatory dinosaurs closely related to birds, whose members include the Velociraptor, the dinosaurs that terrorized in "Jurassic Park." The jawbone would have been from a young dinosaur chick, and the early developmental stage of the bone suggests it was born nearby.

Cnn

 

படச்செய்தி

இஸ்ரேலையும் பாலஸ்தீனத்தையும் பிரிக்கும் பிரிவினைச்சுவரைப் பார்க்கிறீர்கள். இச்சுவர்  கிழக்கு ஜெருசலேம் மற்றும் பாலஸ்தீன வெஸ்ட்பேங்க் பகுதியான க்வாலன் இந்தியா என்ற பகுதியை பிரிக்கிறது.

 

 

 

கருத்துகள்