30 பிளஸ் பெண்களின் கல்யாண விரக்தி! - பானுமதி ராமகிருஷ்ணா - நவீன் சந்திரா, சலோனி லுத்ரா
பானுமதி ராமகிருஷ்ணா
இயக்கம்: ஸ்ரீகாந்த் நகோதி
ஒளிப்பதிவு: சாய் பிரகாஷ் யு
இசை: ஷ்ரவண் பரத்வாஜ்
நகரில் வாழும் ஈகோ பிடித்த
அகங்காரமான விட்டுக்கொடுக்காதவள் பானுமதி. அவள் ஐந்து ஆண்டுகளாக காதலிக்கும் ராம்,
அவளைவிட்டுவிடுட 24 வயதான பெண்ணை மணக்க தயாராகிறான். இது பானுவை குழப்பத்திலும் மனச்சோர்விலும்
தள்ளுகிறது. அப்போது தெனாலியில் இருந்து அவர்கள் ஆபீசுக்கு வரும் ராமகிருஷ்ணா, அவளுக்கு
அடுத்த தொல்லையாக இருக்கிறான். கிராமத்திலிருந்து வந்தாலும் அனைத்து விஷயங்களையும்
நேர்மறையாக பார்க்கிறான். அவனை என்னதான் திட்டினாலும் அன்பும் அக்கறையுமாக பானுவை அணுகுகிறான்.
பேசுகிறார். மெல்ல பானு அவன் மீது காதல் கொள்கிறாள்.
ராமுக்கு வயது 33. அவன்
வீட்டில் வரன் பார்க்கிறார்கள். ஆனால் வயது காரணமாக தட்டிப்போகிறது. அவனுக்கு ஆபீசில்
பானு மீது மெல்ல காதல் தோன்றுகிறது. அதற்கு அச்சாரமாக அவனது தங்கையை கண்டுபிடித்து
பேச வைக்கிறாள் பானு. இதனால் நெகிழ்ச்சியாகிறான் ராமகிருஷ்ணா. அவள் தன்னை கவனிக்கிறான்
என்பதை தவிர்த்து காதலிக்கிறாள் என்பதை அவன் உணரமுடியவில்லை. தன்னை மெல்ல அவளுக்கேற்ப
மாற்றினாலும் அவனது தாழ்வு மனப்பான்மை காரணமாக தன்னை பிடிக்கவில்லை என்று நினைக்கிறான்.
அதனால் அவளது முன்னாள் காதலன் ராமுக்கு மன்னிப்பு கடிதத்தை பானுவின் கணினியிலிருந்து
அனுப்புகிறான். இதனால் பானுவுக்கும், ராமகிருஷ்ணனுக்கும் உறவில் விரிசல் ஏற்படுகிறது.
வேலையை விட்டுவிட்டு நீ போகலைன்னா நான் போய்டுவேன் என தெருவில் கத்தி சண்டை போடுகிறாள்.
அவர்கள் ஒன்றாக சேர்ந்தார்களா, பானுவின் காதலைப் புரிந்துகொண்டானா ராமகிருஷ்ணா, அவன்
நிலையை பானு புரிந்துகொண்டாளா என்பதுதான் இறுதிக்காட்சி.
ஆஹா
நவீன் சந்திரா, சலோனி லுத்ரா
என இரண்டு முக்கிய கதாபாத்திரங்களும் நடிப்பில் பின்னியிருக்கிறார்கள். சலோனி லுத்ராவுக்கு
நடிக்க அதிக வாய்ப்பு. அதில் அலட்டிக்கொள்ளாமல் ஈகோ கொண்ட ஐடி பெண்ணாக நன்றாக நடித்திருக்கிறார்.
இறுதிக்காட்சியில் ராமகிருஷ்ணாவிடம் பேசும் காட்சி நெகிழ்ச்சியாக காட்சிபடுத்தப்படுத்தப்பட்டிருக்கிறது.
பெண்களுக்கு திருமணம் எனும்போது
தகுதி என்பதை விட வயதை மட்டுமே முக்கியமான அம்சமாக பார்ப்பதை நன்றாக கவனிக்கும்படி
எடுத்திருக்கிறார்கள்.
ஐயையோ
விவா ஹர்ஷாவின் காமெடி மட்டுமே
ஆறுதல். அதுவும் குறைவான காட்சிகள்தான். சலோனியின் ஆர்வம் என்பது சாக்லெட் மில்க் ஷேக்
மட்டும்தானா? அவருக்கு பிடித்த மற்ற விஷயங்கள் பற்றி ராமகிருஷ்ணா என்ன நினைக்கிறார்
என்பது நமக்கு ஏதும் காட்டப்படுவதில்லை.
நகரம், கிராமம் என இரு மாறுபட்ட
நிலப்பரப்புகளில் வாழ்பவர்களுக்கு உள்ள நிறைய வேறுபாடுகள் இங்கு காட்சிபடுத்தப்படவில்லை.
முழுக்க ராமகிருஷ்ணா நேர்மறையாக எண்ணங்களைக் கொண்டவராகவே காட்டப்பட்டிருக்கிறார்.
காதல் தம்பதிகள் 33-30
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக