மாற்றுப்பாலினத்தவர்கள் பற்றி முக்கிய நூல்கள் அறிமுகம்!
நூல் அறிமுகம்
காரி 2008
அம்ருதா பாட்டில்
ஹார்பர் கோலின்ஸ்
இந்தியாவில் மாற்றுப்பாலினத்தவர்
பற்றி முதல் கிராபிக் நாவல்.
மும்பையில் வாழும் இருவர்
பற்றிய கதை. மாற்றுப்பாலினத்தவர் பற்றிய வாழ்க்கை, அவல நகைச்சுவை, ஜீரணிக்க கடினமான
உண்மைகள் என கிராபிக் நாவல் நாம் பார்க்க உலகை அறிமுகப்படுத்துகிறது.
சாக்லெட் அண்ட் அதர் ரைட்டிங்க்ஸ் ஆஃப்
மேல் – மேல் டிசையர் 2006
உக்ரா
ஆக்ஸ்போர்டு பிரஸ்
1927ஆம் ஆண்டு இந்தியாவில்
தேசியவாதம் வேகம்பிடித்த காலத்தில் இலக்கிய உலகில் எழுத தொடங்கியவர் உக்ரா. இவர் எழுதிய
ஓரினச்சேர்க்கையாளர் பற்றிய கதைகளின் தொகுப்பு, சாக்லெட். ரூத் வனிதா இதனை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்து எழுதி அனைவருக்கும் வாசிக்கும் படி செய்திருக்கிறார்.
டின்மேன் 2017
சாரா வின்மேன்
எல்லிஸ், மைக்கேல் ஆகியோரின்
உறவு எப்படி நட்பாக தொடங்கி காதலில் முடிகிறது என்பதை விவரிக்கிறது நாவல். குழப்பான
உறவு சூழல் இந்த உறவில் குறுக்கிடும் அன்னாவால் மேலும் சிக்கலாகிறது. எழுத்தாளரின்
மூன்றாவது நாவல் இது.
ஹார்ட்ஸ்டாப்பர்
2019-20
அலைஸ் ஓஸ்மன்
நிக், சார்லி ஆகிய இருவரின்
பல்வேறு சமூக தடைகளை தாண்டிய நட்பும் நெருங்கிய உறவும்தான் இந்த கிராபிக் நாவலின் அடிப்படை.
தொடர்ச்சியான பாகங்களாக வெளிவருகிற கிராபிக் நாவல் வாசகர்களையும் ஈர்த்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக