சினிமாவின் கவர்ச்சியைத் தாண்டி நிஜ உலகைக் காண்பது கடினம்! - நடிகர் ஆயுஷ்மான் குரானா
ஆயுஷ்மான் குரானா
இந்தி திரைப்பட நடிகர்
நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
நான் நேர்த்தியானவன் இல்லை.
நிறைய விஷயங்களுக்கு மக்களை சார்ந்து உள்ளேன். ஆண்டுக்கு மூன்று படங்கள் செய்து வருகிறேன்.
ஆனால் நான் சோம்பேறியாக உள்ளேன். அதனை மாற்றிக்கொள்ள நினைக்கிறேன்.
நட்சத்திர நடிகர் என்றால் உங்களுக்கு பிடித்தது என்ன? பிடிக்காதது
என்ன?
அனைத்து விஷயங்களையும் உங்களைச்
சார்ந்தவர்கள் செய்து உங்களை பராமரிப்பார்கள். உங்களைச் சுற்றி பத்து பேர் இருப்பார்கள்.
உங்களுக்குள் எந்த பயணத்திலும் உடன் இருப்பது வெறுமைதான். வெளிநாட்டு பயணத்தில் உங்களை
அறிந்தவர்கள் அங்கு குறைவாக இருப்பார்கள் என்பதால் அந்த நிலையை எதிர்கொள்ள கடினமாக
இருக்கும். கவர்ச்சி நிறைந்த இந்த உலகம் யதார்த்த உலகத்திலிருந்து மாறுபட்டது.
பயணம் உங்களை நீங்களே புரிந்துகொள்ள உதவுகிறதா?
ஆம். அப்படித்தான் நினைக்கிறேன்.
புத்தாண்டிற்கு பஹாமஸ் சென்றிருந்தேன். அங்கு ஏழு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தேன்.
சாதாரண மனிதராக அங்கு வரிசையில் நின்று நமக்கு என்ன தேவையோ பெற்றது நன்றாக இருந்தது.
உங்களுக்கென உருவாக்கி வைத்திருக்கும் விஷயங்களிலிருந்து வெளியே வந்து பார்த்தால்தான்
வெளியுலகம் புரியும். இதனை நான் அங்கு உணர்ந்துகொண்டேன்.
இந்த மாற்றங்களுக்கு பௌத்த மதம் உதவியதா?
2017ஆம்ஆண்டு மேரி பியாரி
பிந்து படத்தில் நடித்தேன். படம் பெரியளவு வெற்றி பெறவில்லை.எளிதாக நான் குழப்பத்தில்
ஆழ்ந்துவிடுவேன். அதனை தடுத்து நான் அமைதியாக யோசிக்க வைக்க பௌத்த மத மந்திரங்கள் உதவின.
தினசரி நாற்பது நிமிடங்கள் நான் அவற்றை உச்சரித்து வந்தேன். வாழ்க்கைக்கான இலக்கோடு
பயணிக்க பௌத்தம் உதவுகிறது.
ஓடிடி தளத்தில் குலாபோ சித்தாபோ என்ற உங்கள் படம் வெளியாகியிருக்கிறது.
இதனை எப்படி நினைக்கிறீர்கள்?
சினிமா என்பது சொகுசான ஒன்று.
அனைவருக்கும் தினசரி தேவைப்படும் ஒன்றாக அதனைக் கருத முடியாது. இன்று பல்லாயிரம் பேருக்கு
வேலையிழப்பு நேர்ந்திருக்கிறது. பொருளாதாரம் சிதைவுக்கு உள்ளாகியிருக்கிறது. மல்டிபிளக்ஸ்
தியேட்டருக்கு மக்கள் சென்று ஆயிரம் ரூபாய் செலவழிக்க யோசித்து வருகின்றனர். ஓடிடி
இதற்கு சரியான வழியாக இருக்கும். பெரும் செலவில் நடைபெறும் திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டிருக்கின்றன.
கொரோனா டெஸ்ட் மட்டுமே இப்போதைக்கு நடந்து வருகின்றன. இந்த நிலை மாற ஆறு மாதங்கள் ஆகும்.
வெற்றி பெற்றவுடன் அந்த சூழ்நிலை உங்களுக்கு எப்படி இருந்தது?
விக்கி டோனர் படத்தை முடித்தபிறகு
மீதி நேரத்தை நான் குடும்பத்துடன்தான் செலவழித்தேன். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றி
அடையும் என்று நான் நினைக்கவில்லை. அப்படி வெற்றி அடைந்தது நம்மை வெற்றியாளர் என்ற
மாயத்தோற்றத்தை உருவாக்கும். நான் தோல்வியின் மூலம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.
உங்கள் குழந்தைகளை எப்படி பார்த்துக்கொள்கிறீர்கள்?
நான் என்னுடைய மகள், மகன்
என இருவருக்கும் சிறப்பான தந்தையாக இருக்கவே முயன்று கொண்டிருக்கிறேன். அவர்கள் அப்படியே
என்னைப் போலவே இருக்கிறார்கள். என்னைப்போலவே கணக்குப் பாடத்தில் தடுமாறி வருவதைச் சொன்னேன்.
கணக்குப் பாடங்களை அவர்களுக்கு சொல்லித் தருவது எனக்கு கடினமாக இருக்கிறது. என் மகன்
வீர்ஜாவீர் கலை சார்ந்த ஆர்வம் இருக்கிறது. பியானோவை வாசிக்கிறான்.
பொதுமுடக்க காலத்தில் நீங்கள் உங்கள் படங்களை பார்த்தீர்களா?
நான் எனது படங்களை எடிட்
செய்யும்போது மட்டுமே பார்ப்பேன். அதற்குப் பிறகு பார்ப்பதில்லை. அப்படி பார்த்தால்
உங்களுக்குள் இரண்டு விஷயங்கள் தோன்றும். ஒன்று, உங்களைப் பார்த்து நீங்களே பெருமை
கொள்வீர்கள். அல்லது தீவிரமான விமர்சனத்தை உருவாக்கிக்கொள்வீர்கள். இது இரண்டுமே ஆபத்து
என்பதால் இதனை நான் தவிர்த்து விடுகிறேன். டும் லகா ஹே கைசா என்ற படத்தை மட்டும் நான்
மக்களுடன் தியேட்டரில் பார்த்தேன். அது எனக்கு மிகவும் முக்கியமான ஸ்பெஷலான படமும்
கூட. அதற்குப்பிறகு தியேட்டரில் நான் படங்களைப் பார்ப்பதில்லை. சண்டிகர் நகரிலிருந்து
நடிக்கும் பேராசையுடன் நான் இங்கு வந்தேன். படங்களை நடித்துவிட்டேன். படங்களை அதிகவிலை
டிக்கெட்டுகளை பிளாக்கில் வாங்கி பார்த்து வளர்ந்தவன் நான். சினிமாவில் நான் நடித்தது
பெருமையாகவே இருக்கிறது.
பிலிம்பேர்
ஜிடேஷ் பிள்ளை
கருத்துகள்
கருத்துரையிடுக