இடம்பெயர்ந்த விவசாயிகளைக் காக்க முயலும் போலீஸ் அதிகாரியின் சீற்றம்! - ரூலர்
ரூலர்
இயக்கம் – கே.எஸ்.ரவிகுமார்.
கதை, வசனம்: பருச்சாரி முரளி
இசை: சிரந்தன் பட்
ஒளிப்பதிவு: ராம் பிரசாத்
உத்தரப்பிரதேசத்தில் வாழும்
தெலுங்கு விவசாயிகளை காக்கத் துடித்து, எதிரிகளால் பந்தாடப்பட்டு நினைவுகள் மறந்துபோகும்
இன்ஸ்பெக்டர் தர்மாவின் கதை.
முதல் காட்சியில் தொழிலதிபரான
பெண்மணியின் காரின் மீது தலையில் காயம், உடலில் கத்திக்குத்துகளோடு பாலைய்யா வந்து
விழுகிறார். அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அங்கு அவர் இருக்கும்போது, அவருக்கு
உதவி செய்த தொழிலதிபரான பெண்மணியும் நெஞ்சு வலி காரணமாக அங்கு சேர்க்கப்படுகிறார்.
அங்கு அப்பெண்மணியின் மீது நடக்கும் கொலைமுயற்சியை தடுக்கிறார் பாலைய்யா. இதனால் அவர் மீது பாசம் கொள்ளும் அப்பெண்மணி, அவர்
மீது சொத்துக்களை எழுதி வைத்து அவரை தனது இறந்துபோன மகன் அர்ஜூன் பிரசாத் எனவே அழைக்கிறார்.
எப்படி இது சாத்தியம்? அவருக்கு நினைவுகள் மறந்துபோனதால்தான். அவருடைய பர்சில் இளம்பெண்
ஒருவருடைய புகைப்படம் இருக்கிறது. அதை ஆற்றில் தூக்கியெறிகிறார் தொழிலதிபர்.
பாலைய்யாவிற்கு எதற்கு இத்தனை
காயங்கள், அவரின் பர்சில் இருந்த புகைப்படம் யாருடையது? என்பதைத் தெரிந்துகொள்ள நினைத்தால்
கே.எஸ். ரவிகுமாரின் ரூலர் படம் தொடங்குகிறது என்று அர்த்தம்.
ஆஹா
படம் முழுக்க பாலைய்யா நடிப்பில்
பின்னி எடுக்கிறார். தெலுங்கு விவசாயிகளை பிச்சைக்காரர்கள், உ.பி ஆட்கள் பேச கொந்தளிக்கும்
காட்சி அபாரம். தங்களுக்கு விவசாய நிலமளித்து உதவிய பிரகாஷ்ராஜின் குடும்பத்திற்கு
உயிரையே தர முன்வரும் தீரம் வெளிப்படும் ரயில் சண்டை மிரட்டுகிறது. சிரஞ்சன் பட் இசையில்
பாடல்கள் கேட்குமாறு இருக்கிறது. வீடியோவை விட ஆடியோவை மட்டும் கேட்பது மனநலம், உடல்நலம்
காக்கும்.
ஐயையோ
காமெடி இல்லை. சீனிவாச ரெட்டி,
ரகுபாபு காமெடி எரிச்சலையே தருகிறது. சோனல் சௌகானை நண்பராக பாலைய்யா சொல்லும்போது எப்படி
அவரை மணக்க சம்மதிக்கிறார் சௌகான்? வேதிகாவின் தொடக்க காட்சியும் கூட சரியாக ஈர்ப்பாக
இல்லை.
மக்களில் சாதி, மத, நிலப்பரப்பு
பாகுபாடு காட்டவேண்டியதில்லை என்ற செய்தியை சொன்ன விதம் பாராட்டுக்குரியது. பெரூம்பாலான நாளிதழ்கள் படத்திற்கு கொடுத்த ரேட்டிங் 3 யைத் தாண்டவில்லை. பாலய்யாவின் ரசிகர்கள்தான் இந்தப்படத்தின் நிறைய அம்சங்களை ஏற்க முடியும்.
விவசாயிகளின் குரல்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக