பார்த்த பெண்களையெல்லாம் விரும்பும் காதல்மன்னன்! - கோபி
கோபி- கோட மீதா பிள்ளி
இயக்கம்: ஜனார்த்தனா மகர்ஷி
கதை: நிவாஸ், வசனம்: வெள்ளிகொண்டா
ஸ்ரீனிவாஸ்
திரைக்கதை: வெங்கடேஸ்வர
ராவ்
ஒளிப்பதிவு: ஸ்ரீனிவாச ரெட்டி
இசை: கோட்டி
அழகான பெண்களை பார்த்தால்
உடனே சபலப்படும் இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள்தான் கதை.
அழகான பெண்களைப் பார்த்தால்
இனி இவதான் நம் வாழ்க்கை என்றபடி அப்படி ஃபாலோ செய்யும் குணமுடைய இளைஞன், நரேஷ். தன்
நண்பன் பெண் பார்க்க அழைக்க, மாப்பிள்ளைத் தோழனாக அங்கு செல்கிறான். மணப்பெண்ணை பார்த்ததும்
நரேஷூக்கு பிடித்துவிட, நண்பனின் மனதைக் கலைத்து அந்த வரனை உதறித்தள்ளச்சொல்கிறான்.
இந்த தகவலை பெண் வீட்டாருக்கு சொல்ல வருவது போல வந்து அத்தனை பேரின் மனதிலும் தன்னை
நல்லவனாக காட்டி, கௌரி முஞ்சாலின் காலில் விழுந்து காதலைப் பெறுகிறான். பெங்களூருக்கு
வேலைக்கான இன்டர்வியூ செல்கிறான். அங்கு முதலாளி, நரேஷின் பணிவைப் பார்த்ததும் தன்
பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். அதற்கு நரேஷ் ஓகே சொல்லுகிறார். பெண்ணைப்
பார்த்தால், ஆலமரம் போல இருக்க உடனே டிராக் மாற்றி, தங்கச்சி என உருகி அவர்களின் காரை
வாங்கி ஊர் திரும்புகிறார். அப்போது மணப்பெண் அலங்காரத்தில் பெண் ஒருவர் காரில் லிஃப்ட்
கேட்க, தனக்கு பார்த்த கௌரியை விட இந்தப் பெண் அழகாக இருக்க உடனே அவரை மறந்துவிட்டு
கட்டுனா இந்தப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்யணும் என நினைக்கிறார். அன்று மாலை நடக்கும்
கல்யாணம் நடந்ததா? இல்லையா, இவர் காரில் ஏறிய பெண் யார் என்பதுதான் கதை.
ஆஹா
நரேஷ், அவரது அப்பா தனிக்கெல்லா
பரணி, அவரின் அம்மா என நடிப்பில் பின்னி எடுக்கிறார்கள். பிரம்மானந்தம் குறைந்த காட்சிகள்
வந்தாலும் அசத்துகிறார். வேணு மாதவின் காமெடியும் ஓகே.
ஐயையோ
ஜெகபதி பாபுக்கான கதாபாத்திரம்
பொருந்தவில்லை. தீவிரவாதியாக வரும் பெண், கவர்ச்சி தீவிரவாதி. தொப்புள் தெரிய சண்டை
போடுகிறார். கிளுகிளு ஆட்டம் போடுகிறார். இவரைவிட கௌரிக்கு காட்சிகள் குறைவு. கதையை
பெருமாளும், லட்சுமியும் சொல்வது போல இருப்பது நிறைய இடங்களில் பொருந்தவில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக