இயற்கையை தேவைக்கு அதிகமாக பயன்படுத்திவிட்டோம்! - நடிகர் சத்ருகன் சின்கா
மொழிபெயர்ப்பு நேர்காணல்
சத்ருகன் சின்கா, இந்தி
திரைப்பட நடிகர்
கோவிட்-19 மூலம் என்னவிதமான தாக்கம் ஏற்பட்டுள்ளது என்று
நினைக்கிறீர்கள்?
இந்த பெருந்தொற்று தன்னளவில்
அனைவரையும் பேச வைத்துள்ளதுதான். உலகமே அதைச்சுற்றித்தானே செயல்படுகிறது. நோய் பற்றிய
எதிர்மறை செய்திகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.
இயற்கையை ஏமாற்ற முடியாது
என்பதை கோவிட்-19 பெருந்தொற்று நிரூபித்துள்ளது. பூமிக்கு நாம் இழைத்துள்ள பாதிப்பை
பற்றி யோசிக்க இதுதான் சரியான நேரம்.
இந்தியாவில் மக்கள் வரிசையில்
நிற்கவே சோம்பல் படுவார்கள். இந்த நிலையில் சமூக இடைவெளியை எப்படி கடைபிடிப்பது?
நாம் இந்த விவகாரத்தில்
ஜப்பான் நாட்டை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் மாசுபாடு காரணமாக இந்த
வைரஸ் தொற்றுக்கு முன்பாகவே முக கவசங்களை அணியத் தொடங்கிவிட்டனர். இதுபோன்ற முன்னெச்சரிக்கைகளுக்கு
நாம் பழகுவது முக்கியம்.
பெருந்தொற்று விவகாரம்,
பல்வேறு நாடுகளையும் சுகாதாரம் சார்ந்த கொள்கைகளை மாற்றிக்கொள்ள தூண்டியுள்ளதாக நினைக்கிறீர்களா?
இதில் இந்தியாவின் நிலை என்ன?.
இந்தியாவில் சுகாதாரத்திற்கென
தொலைநோக்கான திட்டங்கள் கிடையாது. மக்களுக்கு குழப்பமான சூழ்நிலை இருந்தாலும், அவர்கள்
மருத்துவம் சார்ந்த காப்பீடுகளை நாடத்தொடங்கியுள்ளனர். ஆபத்தான சூழலில் இதுபோன்ற செயல்பாடுகளே
அவர்களைக் காப்பாற்றும் என்பதை புரிந்துகொண்டு விட்டனர்.
எந்த உறவுகளும் அதிக
காலத்திற்கு சிறப்பானதாக இருக்கமுடியாது. இல்லற உறவில் எப்படி ஒரு வீட்டில் ஒன்றாக
சேர்ந்து வாழ்வதோடு சவால்களையும் சமாளிக்கின்றனர்?
பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதோடு,
ஒருவருக்கொருவர் அனுசரனையும் அக்கறையுமாக இருப்பதுதான் அவர்களை ஒன்றாக இருக்க வைக்கிறது.
ரிஷிகபூர், இர்பான் கான் மறைவை பலரும் கண்ணீரோ பகிர்ந்துகொள்ள
காரணம் என்ன?
அவர்கள் இருவருமே மக்களால்
பெரிதும் விரும்பப்பட்டனர். அதனால்தான் மக்கள் அவர்களின் மறைவுக்கு வருந்தி கண்ணீர்
சிந்துகின்றனர்.
பிலிம்பேர்
தேவேஷ் சர்மா
கருத்துகள்
கருத்துரையிடுக