வறுமையைத்தீர்த்து, பொருளாதார வளர்ச்சி ஓங்க அரசு திட்டங்கள் தீட்டவில்லை!







Poor, Black, Poverty, Homeless, Jobless, Person, Crisis




மொழிபெயர்ப்பு நேர்காணல்

சந்தோஷ் மெஹ்ரோத்ரா

எழுத்தாளர்.

வேலையின்மை அதிகரித்து வருகிறது. இதற்கு என்ன காரணம்?

பெருந்தொற்றுக்கு முன்பிருந்த காரணங்கள், இப்போது தீவிரமாகியுள்ளன. 2004-14 ஆம் ஆண்டுவரை பொருளாதார வளர்ச்சி வேகமாக இருந்தது. எட்டு சதவீதம் வரையில் வேகமான வளர்ச்சியால், விவசாயத்துறை சாராத வேலைவாய்ப்புகள்(7.5மில்லியன்) அதிகரித்தன. ஆனால் 2014க்குப் பிறகு இச்சூழ்நிலை மாறியது. 2014க்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி 7.5 என குறைந்தது, இப்போது, 4.3 சதவீதமாக உள்ளது. எனவே, வேலையின்மை சூழல் ஏற்பட்டுள்ளது. முக்கிய காரணம், தொழிலாளர்கள் ஆண்டுக்கு இருபது லட்சம் என்ற எண்ணிக்கையில் தொழில்துறையில் நுழைந்து வருகின்றனர். இன்றுவரையில் 50 லட்சம் பேர் இத்துறையில் 2014ஆம் ஆண்டு தொடங்கி நுழைந்துள்ளனர். இவர்களுக்கான வேலைவாய்ப்பு தொழில்துறை உருவாக்க முடியாத தோல்விதான் பிரச்னைக்கு காரணம்.

இதற்கு தீர்வாக உங்கள் நூலில் கூறியுள்ள தீர்வுகள் என்ன?

 அரசு, கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகிய விஷயங்களில் தீவிரமான கவனம் செலுத்தி முதலீடுகளை பெறவேண்டும். அப்போதுதான் அத்துறைகள் வளர்ச்சி பெறும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். அடுத்து, நாம் வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு போதிய கவனத்தை அளிக்கவில்லை. 2004-2014 காலகட்டத்தில் நாம் நிறைய முதலீடுகளை அடிப்படையான துறைகளுக்கு அளித்திருந்தால் பொருளாதார தேக்கம் ஏற்பட்டிருக்காது.

கடந்த மார்ச் மாதத்தில் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதத்தை எட்டிவிட்டது. இதற்கு என்ன காரணம்? பெருந்தொற்று சூழ்நிலையா? அரசின் செயல்பாடுகளில் தடுமாற்றமா?

அரசு இப்போது அளித்திருக்கும் நிதி ஊக்கத்தொகை கூட அதன் உள்நாட்டு உற்பத்தியைப் பொறுத்தளவில் ஒரு சதவீதம்தான். மேலும், 2008ஆம்ஆண்டு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை உள்நாட்டு உற்பத்தியில் நான்கு சதவீதம் ஆகும். எனவே நிதி ஊக்கத்தொகை அதனால்தான் பொருளாதாரத்தை மீட்க முடியவில்லை. கிராம வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நிதியுதவியை அதிகமாக வழங்கியிருக்கிறார்கள். ஆனால் இடம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதால், அங்கு பெறும் ஊதியத்தின் அளவு குறையும் என்பதையும் அரசு கணக்கில் கொண்டிருக்கவேண்டும். இதனால், ஏழை மக்களுக்கு பண உதவிகளை நேரடியாக அளிப்பது முக்கியம்.

முறைப்படுத்தப்படாத தொழிலாளர்களுக்கு எவ்வித உதவிகள் வழங்கப்படவேண்டும் என்கிறீர்கள்?

அவர்களுக்கு பிராவிடண்ட் பண்ட் வகையில் உதவிகளை வழங்கலாம். மாநில அரசும் சமூக பாதுகாப்பு என்ற பிரிவில் காப்பீட்டை வழங்கி அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கலாம். இவ்வகையில் வழங்கப்படும் நிதியுதவி உள்நாட்டு உற்பத்தியில் 0.65 சதவீதத்தை தாண்டக்கூடாது.

பிஸினஸ் டுடே

பூஜா சர்கார்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்