டைனமைட் உருவாக வேர்க்கடலை உதவுகிறதா? - மிஸ்டர் ரோனி






Truth, Newspaper, News, Printed, Text, Message, Page


மிஸ்டர் ரோனி

டைனமட்டில் பருப்புகள் உள்ளன

டைனமைட்டிலுள்ள முக்கியமான பருப்பொருள், நைட்ரோகிளிசரால். இதற்கான முக்கிய ஆதாரப்பொருளான கிளிசரால், வேர்க்கடலையிலிருந்து பெறப்படுகிறது. இந்த வழியன்றி வேறு வகையிலும் கிளிசரால் தயாரிக்கப்பட்டு பெறப்படுகிறது.

மூளைக்கு வலி தெரியாது

உண்மைதான். உங்களுக்கு தலை வலிக்கிறது என்றால் மூளையைச் சுற்றியுள்ள பகுதியுள்ள தசையில் பாதிப்பு என்று பொருள். பொதுவாக ஓரிடத்தில் வலி என்றால், அதைப்பற்றி தகவல்களை நோசிசெப்டர்ஸ் என்ற உணர்விகள் மூளைக்கு அல்லது தண்டுவடத்திற்கு தகவல் கொடுக்கின்றன. இதன் அடிப்படையில் வலி ஏற்படுகிறது. இதனால் அங்கு ஏற்பட்ட பாதிப்பை நாம் கவனித்து சரி செய்கிறோம். இப்படி வலி ஏற்படாதவிட்டால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை நாம் அடையாளம் காண்பது கடினம்.

நீருடன் இணையும்போது சில உலோகங்கள் வெடிக்கும்

சோடியம், லித்தியம், பொட்டாசியம், சீசியம், ரூபிடியம் ஆகிய உலோகங்கள் நீரில் பட்டால் உடனே ஆக்சிஜன் மூலக்கூறுகளுடன் வினைபுரிந்து வெடிக்கும். இவை காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வினைபுரிந்து வெடிக்கும் தன்மையை பெறுகின்றன.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்