நியூஸ் ரூம்: மாற்றுப்பாலினத்தவரின் வயது தளர்வை அறிவித்த தமிழக அரசு !
அட!
வேலைவாய்ப்பு!
தமிழகத்தின் உள்துறை அமைச்சகம், மாற்றுப்பாலினத்தவருக்கு காவல்துறை சார்ந்த பணியிடங்களில் வயது தளர்வை அறிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டு ஆராதனா என்று மாற்றுப்பாலினத்தவர் தொடங்கிய வழக்கில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், தமிழக அரசு இம்முடிவை அறிவித்துள்ளது. ஆதி திராவிடர்கள், பட்டியலினத்தவர்களுக்கு உள்ளது போலவே மாற்றுப்பாலினத்தவர்களுக்கும் வயது தளர்வு நடைமுறைக்கு வரவிருக்கிறது.
நியூஸ்மினிட்
ஐயையோ!
வெப்பம் அதிகரிப்பு!
அடுத்த ஐந்து ஆண்டுகளில் வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸாக அதிகரிக வாய்ப்புள்ளது என உலக தட்பவெப்பநிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. ”தொழிற்காலத்திற்கு முந்தைய(1850-1950) காலகட்டத்தில் இருந்த வெப்பநிலை இனி, அடுத்து வரும் 20220-24 காலகட்டத்தில் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது” என்கிறார் உலக தட்பவெப்பநிலை ஆராய்ச்சி மைய செயலாளர் பெட்டெரி தாலாஸ்.
யுபிஐ
ஆஹா!
துள்ளிக்குதி!
டில்லியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர், சோகம் முகர்ஜி. இவர் அளவுகோலின் இருபுறமும் 30 நொடிகளில் 101 முறை துள்ளிக்குதித்து கின்னஸ் சாதனை செய்துள்ளார். இதற்கு முன்னர் 97 முறை துள்ளிக்குதித்ததுதான் சாதனையாக இருந்தது. 13 ஆண்டுகளாக தேக்வாண்டோ கற்பதுதான் இச்சாதனைக்கு உதவியது என்றார் முகர்ஜி.
ஓஹோ
குழந்தைகளுக்கு கல்வி!
டில்லியில் உள்ள குடிசைவாழ் பள்ளி மாணவர்களுக்கு, சத்யேந்திர பால் தலைமையில் பட்டதாரி மாணவர்கள் பாடங்களை கற்பித்து வருகிறார்கள். குடிசைவாசி குழந்தைகள் ஆன்லைன் வழியாக கற்கமுடியாது என்பதால் அவர்களுக்கு பட்டதாரிகள் உதவுகிறார்கள். 2017-18 அரசு ஆய்வுப்படி, இந்தியாவில் 23.8 சதவீத வீடுகளில் மட்டும்தான் இணைய வசதி உள்ளது. 2015ஆம் ஆண்டில் 150 மாணவர்களுக்கு இலவசமாக கற்பித்த சத்யேந்திர பால் குழுவினர், இன்று 300 மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர்.
புதுமை!
Indigenous Americans had contact with Polynesians 800 years ago,
Indigenous Americans and Polynesians
crossed thousands of miles of open ocean and made contact with each other as
early as 1200 A.D., centuries before the arrival of Europeans, a new study has
found.Archeologists have long believed the two regions made early contact,
pointing to the early, widespread cultivation of a South American plant in
Polynesia, a collection of more than 1,000 islands scattered over the
Pacific Ocean.
ht |
படச்செய்தி!
பெல்ஜியத்தைச்சேர்ந்த ட்ரீ வெப்நார் உருவாக்கி நீர்த்துளி போன்ற வடிவமைப்பிலான குடில் இது. இடம்: போர்க்லூன், பெல்ஜியம்
கருத்துகள்
கருத்துரையிடுக