செக்ஸ் கிக் தரும் ரோபோக்கள்! அப்டேட் என்ன?



Image result for sexbot
Adweek


செயற்கை நுண்ணறிவு வேலைகளை செய்வதற்கு மட்டுமல்ல; மனிதர்களின் செக்ஸ் தேவைக்காகவும் உருவாக்கப்படுகிறது. லிவ் இன் வெப் சீரிசில் ஆப்பிளின் சிரி ஏஐ உதவியாளரை டெக் மனிதர்கள் காதலிப்பாரே! அதே சூழல் உலகெங்கும் உருவாகி வருகிறது. காரணம், மனிதர்கள் பேசி புரிந்துகொள்ளும் நேரம் மிக குறைந்து வருகிறது. ஒருவரை ஒருவர் பயன்படுத்திக்கொள்ளும் போது, அங்கே காதலுக்கும் அனபுக்கும் இடமேது? 

கடந்த ஆண்டு ரோபாட்டிக்ஸ் அமைப்பு ஒன்று, மார்புகள் மற்றும் முடியை சிறப்பாக நிஜமாக வடிவமைத்து வெற்றி பெற்றுள்ளது. அதோடு, 50 செக்ஸ் பொசிஷன்களையும் உருவாக்கி விட்டது.


  • அமெரிக்காவில் 2 ஆயிரம்பேர்களிடம்(ஆண்கள், பெண்கள்) நடத்திய சர்வேயில், 49 சதவீதத்தினரிடம், ரியலிஸ்டிக்கான செக்ஸ் பொம்மைகளுக்கான தேவை, வாங்கும் விருப்பம் இருப்பது தெரிய வந்துள்ளது. 



  • ரோபோ செக்சுவாலிட்டி என்பது இன்றைய இணைய ட்ரெண்டி ங்காக உள்ளது. க்வாரா, ரெட்டிட் வலைத்தளங்களில் பலரும் இதற்கான விருப்பத்தை கேள்வி வழியாக முன்வைத்துள்ளனர். அதோடு செக்ஸ்பாட் தொடர்பான செய்திகள், ஏடாகூட படங்கள், கார்ட்டூன்(சவீதா பாபி) என பல்வேறு படங்கள், ஆபாச படங்களைப் பார்ப்பது இணையத்தில் அதிகரித்துள்ளது. 



  • பார்சிலோனா டாக்டர் செர்ஜி சான்டோஸ் பார்த்திபன் போல பெண்களை புதுமையாக யோசித்துள்ளார். இவரின் கண்டுபிடிப்பான சமந்தா ரோபோவை செக்சின்போது ஒரு சன்னி லியோன் போல ஒரு மோடிலும்,  மற்ற நேரங்களில் கீர்த்தி சுரேஷ் போல குடும்ப குத்துவிளக்காவும் மாற்றிக்கொள்ள முடியுமாம். இந்தியாவில் ஹிட் அடிக்க இது போதாதா?
2017   ஆம் ஆண்டு மேட் மெக்முல்லன் ஹார்மோனி என்ற செக்ஸ் ரோபோவை உருவாக்கினார். என்ன ஸ்பெஷல்? உங்களுடைய ஏடாகூட செக்ஸ் ஆசைகள், விருப்பங்கள் என அனைத்தையும் கற்றுக்கொள்ளும் திறன் கொண்டது ஹார்மோனி. வெவ்வேறு தோல் உள்ளிட்ட விஷயங்களையும் எளிதாக மாற்றிக்கொள்ளும் வசதியும் ஹார்மோனியில் உண்டு.