தடம்புரண்ட டெக் கம்பெனிகளின் தயாரிப்பு!
மொபைல் வேர்ல்டு காங்கிரசில் எப்போது புது கண்டுபிடிப்புகளை ஆரவாரமாக அறிமுகப்படுத்துவார்கள். சிலதுதான் டெவலப் ஆகும். பிற கண்டுபிடிப்புகள் சீன பட்டாசாய் புஸ் ஆகும். அவற்றில் சில.
பிளாக்பெர்ரி
2015 ஆம் ஆண்டு பிளாக்பெர்ரி லீப் என்ற போனை மொபைல் வேர்ல்டு காங்கிரசில் வெளியிட்டது. பட்டன்களே இல்லாத முழு டச் ஸ்க்ரீன் போன் இது. ஆனால் பரிதாபமாக செல்ஃப் எடுக்காது தோல்வியைச் சந்தித்தது. ஓராண்டுதான். இந்த செல்போன்களை சீனாவின் டிஎல்சி கம்பெனிக்கு கொடுத்துவிட்டது பிளாக்பெர்ரி.
மொசில்லா ஓஎஸ்
டெலிஃபோனிகா என்ற கம்பெனி, ஃபயர்ஃபாக்ஸ் ஓஎஸ்ஸை வைத்து போனை வெளியிட்டு அடி வாங்கியது. டொனேஷனில் இயங்குவது மொசில்லா கம்பெனி. பின்னாளில் ஸ்பானிஷ் கம்பெனி , மொசில்லாவைப் புறக்கணித்து கூகுளின் க்ளவுட் சேவைகள் பக்கம் மாறியதுடன் போன் வெளியீடு முடிவுக்கு வந்தது.
அலெக்சாவுக்கு எதிரி
அனிட்ஏ என்ற ரோலிங் அசிஸ்டென்ட் அறிமுகமானது இங்குதான். ஆனால் டெமோவில் வாடிக்கையாளர்கள் ஈர்க்கவில்லை. அதே ஆண்டில் எல்ஜி, லேசர், கேமரா மூலம் நகரும் பூனை வடிவ பாட் ஒன்றை தயாரித்தது. ஆனால் இப்பொருள் வெற்றியா தோல்வியா என்றே தெரியவில்லை.
எல்ஜியின் சொதப்பல்
ஆப்பிள் வாட்ச் போலவே எல்ஜி தயாரிக்க முயன்ற வாட்ச்தான் ஜிடி910. ஆனால் வேலை செய்வதில் தடுமாற, வெளியிட்ட சில நாட்களிலே சூப்பர் டூப்பர் பிளாப் ஆனது.
தடம்புரண்டது வோடஃபோன்
வோடஃபோன் மற்றும் டச்சு கம்பெனி ஒன்று இணைந்து வாட்ஸ்அப்புக்கு போட்டியாக ஜைப் மொபைலை உருவாக்கினர். joyn என்பது மெசேஜ் சர்வீசின் பெயர். மூன்றே ஆண்டுகள்தான். ஐடியா பணால் ஆக, கம்பெனியை கூகுள் வாங்கிக்கொண்டது. சட்டி சுட்டுருச்சுடா சோணமுத்தா என பெருமூச்சு விட்டு ஒதுங்கிக்கொண்டது வோடஃபோன்.
நன்றி: லிவ் மின்ட்(நேட் லாங்சன்ஸ் மேரி மேக்ஸ்வட்)