சிங்கப்பூர் - 70 ஆண்டு சாதனை
Women's News Agency |
காவல்துறையில் பெண்கள் - 70 ஆண்டு சாதனை
சிங்கப்பூர் காவல்துறை மிகச்சிறப்பான சாதனையை சத்தமில்லாமல் செய்துள்ளது. ஆம். இங்கு பெண்கள் பணியாற்றத் தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது.
நூர் ஹஃபிஸா ஹருன், வேகமாக காரில் வந்தவரை தடுத்து நிறுத்தினார். அவர் கேட்ட முதல் கேள்வி, பெண் ஆஃபீசரா என்பதுதான்.
ஏன் பெண் ஆஃபீசர் பைக்கில் ட்ராஃபிக் போலீஸ் வேலை பார்க்க கூடாதா? என்ற ஹருன், அபராதத்தை எழுத தொடங்கினார். ஆச்சரியம்தான். இருபத்தெட்டு வயதில் ஹருன் ஸ்டாஃப் செர்ஜென்டாக உள்ளார்.
இதுபோல பெண் ஆஃபீசரா என்ற கேள்விகளைக் கேட்டு அலுத்துப் போய்விட்டேன். ஏன் பெண்கள் பைக் ஓட்டக்கூடாதா, முடியாதா? முடியாது என்றால் அது பொய். ஆண்களைப் போலவே நாங்களும் பயிற்சி பெற்று பைக் ஓட்டுகிறோம் என்கிறார்.
சிங்கப்பூர் காவல்துறையில் 19 சதவீத பெண்கள் பணிபுரிகின்றனர். மொத்தம் 1,800 பேர். பெண்களை காவல்துறையில் பணி அமர்த்துவது என்பது தொடங்கிய ஆண்டு 1949. பரிசோதனை முயற்சிதான். ஆனால் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது.
மக்களிடையே அவ்வளவு புரிந்துணர்வு இல்லையென்றாலும் அரசு பெண்களுக்கு கொடுத்த வாய்ப்பு, பல பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டியுள்ளது.
நன்றி: சானல் நியூ ஆசியா