மூடுபனிநிலம் நிறைவுப்பகுதி: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்










அந்தக்காட்சி குறிப்பிட்ட பொருளின் மீது பேராசை கொண்டு இருக்கும் தன்மையை (பெட்டிஷம்) வெளிப்படுத்துவதாகப்படுகிறது?

      ஒரு மனிதனுக்கும் மோட்டார் சைக்கிளுக்குமான உணர்வெழுச்சியான உறவை ஈர்ப்பை நாம் அனைவரும் அறிவோம். நான் அந்த நடிகருக்கு படத்தில் நடித்ததற்காக சம்பளம் கொடுக்காமல், அதற்கு பதிலாக ஒரு மோட்டார்சைக்கிளை வாங்கித்தந்தேன். அவரது முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை நீங்கள் பார்க்கவேண்டுமே! அது முற்றிலும் கலவரமான நிலை என்று கூறலாம்.

      உங்களது படங்களில் ஒவ்வொரு தனிக்காட்சிக்கும் கூட சீரான தொடர்ச்சியான இயக்கம் உள்ளது. அது இயல்பான ஆழமான தன்மையிலேயே அமைந்துவிடுகிறதா?

நேரத்தின் பரிமாணங்களை விவரிக்கும் எனது தனிப்பட்ட திரைப்பட மொழியினால் அமைந்திருப்பது காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு காட்சியின் கருத்தில் நீங்கள் நுழையும் முன் நடிகர்களுக்கும் நிலப்பரப்பிற்குமான உறவு விளக்கப்படுவதற்கான நேரம் கொடுக்கப்படுகிறது. எனக்கு தார்க்கோவ்ஸ்கியின் ‘ஸ்டாக்கர் படம் மிகவும் பிடித்திருந்தது. ‘நாஸ்டாலஜியா‘ எனக்கு சிறிதே பிடித்திருந்தது. சேக்ரிஃபைஸ் எனக்கு பிடிக்கவில்லை. இந்த மூன்றிலும் நடிகர்கள், நிலப்பரப்பு, கேமரா என மூன்றும் ஒன்றாக பொருந்தி வந்தது ஸ்டாக்கர் படத்தில் மட்டும்தான்.

உங்களுடைய பெரும்பாலான படங்களில் கடந்த காலத்திற்கான துயரம் என்பது உள்ளது. ஆனால் இரு சிறுவர்கள் நடித்துள்ள இப்படத்தில் அதுபோல சோகம் இல்லாமல் வேறுவிதமான முறையில் இயக்கத்தை கையாண்டு உள்ளீர்களே...

      ஓர் இயக்குநராக இறந்தகாலம் என்றால் என்னுடைய தனிப்பட்ட இறந்தகால வாழ்வும் நிகழ்காலத்தின் மீது ஒட்டிக்கொள்கிறது. படத்தின் இறுதியில் வரும் மரம் என்பது சிதெராவிற்கு பயணம் படத்தில் வரும் என்று தனிப்பட்ட ஒரு நிலக்காட்சியாகும்.  இந்த முறையிலான படங்கள், என்பனவற்றை சிறுவர்கள் படத்தின் நிலக்காட்சியாக கடந்து வந்து இறுதியில் வேறுபட்ட இயற்கையான நிலக்காட்சியாக வந்தடையும் தன்மையுடையோர்க்கு நான் புதிய நம்பிக்கையை வழங்குகிறேன். சினிமாதான் உலகைக் காப்பாற்றிக்கொண்டு இருப்பதாக நான் நம்புகிறேன். சினிமா என்னுடைய நம்பிக்கையின் பயணமாயும் என்னுடைய உலகமாயும் உள்ளது. நான் தொடர்ந்து ரகசியமான சிறிய கற்பனைக்கெட்டியளவிலான என்னை வசீகரப்படுத்தும் விஷயங்களை தேடிக்கொண்டே இருக்கிறேன். இந்த விஷயங்கள் தொடர்பாக நான் உறுதியாக நம்பிய விஷயங்களுக்கான பயணங்களை எனது படங்களின் வழியாக நான் தொடர்ந்து செய்து வந்தேன்.

இன்றைய சினிமா குறித்த கடந்த கால சோகமான விஷயங்கள் குறித்து அது தொடர்பாக நீங்கள் ஏதும் அறியவில்லையா?

      சினிமாவின் சிதைவு என்பது திரைப்படங்கள் திரையிடுவதற்கான அனுமதி இடங்கள் குறைவது மட்டுமல்ல. எழுபதுகளில் இயக்குநர்கள் தொடர்ந்து புதிய விடியல்களை காணத்தொடங்கினர். இன்று அவை முடிவு பெற்று விட்டன. சில நல்ல படங்களின் பொதுவான கவர்ச்சியால் மெல்ல மூச்சுவிட தொடங்கியுள்ளன. எங்களுக்கு சினிமா என்பது உலகைக் காப்பாற்றும் புனிதப்போர் போல. நான் பயன்படுத்துகின்ற குழு போல இளைய இயக்குநர்கள் தொழில்நுட்ப குழுவைப் பயன்படுத்துகிறார்கள். பயணத்தின் விரிவாக்கமான இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளும் செலவினை சமாளிக்க அதிக பணம் தேவைப்படுகிறது. நானும் ஒஸிமாவும் இளைய தலைமுறை அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளதைக் குறித்து இசைவான கருத்துகளை பகிர்ந்துகொள்வோம். இன்று அத்தகைய விஷயங்கள் முடிவுக்கு வந்துவிட்டன.

உங்களது படத்தில் உருவாகி வரும் பழமையான நினைவுகளை ஊடான  உண்மைகள் தெளிவான இறுதிப்பகுதியை உருவாக்குவதில்லை. அவை பார்வையாளர்கள் தம் விருப்பத்திற்கிணங்க சுதந்திரமாக கருத்துகளை எப்படி வேண்டுமானாலும் சிந்திக்கும் வண்ணம் உள்ளது.

      எனது படங்களுக்கு இறுதி என்பது இல்லை. என்னை சுற்றியிருப்பவை அனைத்தும் அப்படியே இருக்கிறதுதாக எண்ணுகிறேன். இந்த நிலையான தன்மையை உடைத்து வெளியேற விரும்பினாலும் என்னை ஊக்கப்படுத்தும் எந்தக் காரணிகளும் என்னைச் சுற்றியில்லை. ஓஸிமாவிடம் ஏன் அவர் ஜப்பானில் எந்த படத்தின் படப்பிடிப்பையும் நடத்தவில்லை என்று கேட்டதற்கு அவர், அங்கு அவரை எதுவும் ஊக்கப்படுத்தவில்லை என்று எனது கருத்தை ஒத்தே பதில் கூறினார்.