தியோ ஏஞ்சலோ பவுலோஸின் சினிமா தத்துவம்










நீளமான காட்சி, தொடர்ச்சியான காட்சி, 360 கோணவாக்கிலான காட்சி என இந்த நிலைகள் அனைத்தும் பார்வையாளர்கள் அதனை குறிப்பிட்ட நேரத்திற்கு காண அனுமதிக்கிறது என்பது குறித்து இப்போது விவாதிப்போம். இந்தக்காட்சிகளில் நீங்கள் விரும்புவது இடைவெளி, காலம் குறித்தா அல்லது பார்வையாளரின் கவனம் குறித்து சிந்திப்பீர்களா? நாட்டின் கலாசார வரலாறு குறித்த மரபான கதாபாத்திரங்களை இதில் உருவாக்குவதோடு உண்மையான காரணம் என்றும் தொடர்புடையதுமாக உள்ளது என்று கூறலாமா?

      பல ஆண்டுகள் சினிமா கண்டு வந்ததிலிலிருந்து கதாபாத்திரங்களின் தன்மைகளை நான் உருவாக்கிக் கொள்கிறேன். என்னை சுற்றி வெளிவரும் படங்களைப் பார்த்து அதிலுள்ள சுவாரசியமான அம்சங்களை குறித்து வைத்துக்கொள்வேன். பின்னர் நான் எழுதவும், படங்களை உருவாக்கத் தொடங்கியபிறகு, இவை அனைத்தையும் எனக்குள் கொண்டு வந்து எனது எழுத்தின் பாணியில் உருவாக்கத் தொடங்கினேன். நீளமான காட்சி தொடர்ச்சியான காட்சி என பொதுவாக இணை தொகுப்புக்கு உதவும் தன்மைகளை நான் ஏன் மறுத்தேன் என்பதற்கு அவை இழைபோல ஒன்றாகி உள்ளதை கூறவேண்டியுள்ளது. மான்டேஜ் காட்சிகளை வரலாற்றுக் காரணங்களுக்காக ஒப்புக்கொண்டேனென்றால் அது என்னுடைய திரைப்படமாக இருக்காது. எ.கா: ஐன்ஸ்டீன்.  ஒவ்வொரு காட்சியும் உள்மூச்சும் வெளிமூச்சும் கொண்டிருக்கிற உயிர்தான் என்றே கருதுகிறேன். இவை இயல்பாக நடக்கும்போது என்னுடைய நுழைவை அனுமதிக்காது. அவை எதார்த்தமான இயற்கையான தொடக்கம் மற்றும் மறைவைக் கொண்டுள்ளது.

      இன்றைய சினிமா, இறந்தகாலம் – மௌனங்கள் இடைவெளிகள் கொண்டு பழமையானதாக மாறிவிட்டிருக்கிறது. நிர்ணயிக்கப்படாத காலத்தின் செயல்பாடு கொண்டது. ஒன்றுக்குப் பின் ஒன்று மறைந்துகொண்டே வருகிறது. மௌனம் என்பது இசை தொடர்பான வழியில் தேவைப்படுகிறது என்றாலும் வெட்டுக்கள் மற்றும் மறையும் காட்சிகள் ஆகியவற்றின் இழையாக இது மாறுவதில்லை எனினும் உள்காட்சிகளுக்கு பயன்படுகிறது. வேகமான மெதுவான உள்புற லயங்கள் நிறைந்த காட்சியை முறைப்படி பயன்படுத்துவேன். மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் அமைப்பு பைஸென்டைன் போல ஆதார முறையில் திரையரங்கு அளவுகோல்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட நேரத்தினை குறிப்பிட்டு  அதற்குள் நிறைவு பெற்றிட வேண்டும். நடன அமைப்பு என்பதோடு எனது படங்களுக்கு தொடர்புண்டு என்றாலும் அவற்றை நடிகர்களின் முகங்களுக்கு நான் நான் பயன்படுத்தியதில்லை.  எனவே இடைவெளி தொடர்ந்து இயக்கங்களால் நிரப்பப்பட்டு திறந்தும் மூடியும் அக்கார்டியன் வாத்தியம் போல செயல்படுகிறது. தொகுப்பது என்பது பத்து காட்சிகளை தொகுத்து ஆழமானதாக ஒன்றாக மாற்றுகிறது. 10 காட்சிகள் என்பவை மேலும் பல காட்சிகளாக தொகுக்கப்பட வேண்டும். நான் இவற்றில் மௌனம் இறந்தகாலம் உள்ளிட்டவற்றை சேர்க்கவில்லை.

      முரண்பாடாக, அமெரிக்கப்படங்களில் ஒவ்வொரு காட்சிக்கும் பல்வேறு கோணங்கள் கொண்டு ஒளிப்பதிவு தேவைப்பட்டாலும் ஒரு காட்சிக்கு ஒரு கோணம் மட்டுமே போதுமானது என்று நான் கருதுகிறேன். இதுவே என்னைப் பொறுத்தவரை முக்கியமான விளையாட்டின் விதியாக நினைக்கிறேன். நான் முடிவு செய்துவிட்ட காட்சியினை இம்முறையில் விவாதித்ததில்லை.  எனது முந்தைய படமான மூடுபனி நிலம் படத்தில் வரும் வன்புணர்வு காட்சியில் நிலையான காட்சியில் ஒலியானது காணும் காட்சியினை விட அர்த்தம் கூடியதாக மாறுகிறது. இந்த நிலையான காட்சியில் ஒலியானது இடைவெளியையும் நிரப்பி தொடர்ச்சியாக படத்திற்கு வெளியேயும் ஒரு அர்த்தத்தை  உருவாக்குகிறது.

      ஓவியம் போல அதன் எல்லைக்குளம் ஓவியம் முடியாமல் தொடர்ச்சியாக அதனைத் தாண்டிச் செல்கிற மாயத்தை நிகழ்த்துகிறது. இம்முறையில் உணர்ச்சி வெளிப்பாடற்ற, ஊக்கமான முறையில் பார்வையாளர்கள் தமது கற்பனையை இயக்குநரோடு இணைத்துக் கொள்கிறார்கள். கிரீக்கில் நிகழ்ச்சிகள் மேடையில் நிகழ்வதே ஒழிய அதன் பின்னால் அல்ல என்பதை அறிந்துகொண்டிருப்பீர்கள். தொடர்ச்சியான தடக்காட்சி கேமரா பயணிக்கும் இடைவெளிகள் அனைத்தும்  இணைக்கப்படுகின்றன. கேமரா லென்சினால் படம் பிடிக்கப்படும் பொருளின் அண்மை நிலையைப் பொறுத்து அதனை விரிவாக்கலாம் அல்லது சுருக்கலாம். காட்சியினுள் ஒரு லயம் உருவாவது படத்தினை ஓடிக்கொண்டிருக்கும் நதிநீர் போல தொடர்ச்சியானதாக மாற்றும்.


      பயணிக்கும் வீரர்கள் படத்தில் கேமரா நகரக்கூடிய தடத்தில் 10 செ.மீ நகர்த்தினால் அதற்கான லயம் தொடர்ந்து கிடைக்கும்படியே வைக்கப்பட்டு இருந்தது. 360 டிகிரி காட்சியானது படத்தின் உள்ளே கூறப்பட்ட காட்சி ஒன்றினை வலியுறுத்தப் பயன்படுத்தப்பட்டது. மெக் அலெக்ஸாண்ட்ரோஸ் படத்தில் வட்டவடிவம் பயன்படுத்தப்பட்டது. பண்டையக் காலத்தில் வட்டவடிவிலான நாடக அரங்கங்களில் நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன என்பதைக் குறிக்கும் வண்ணம் அந்த விஷயம் செயல்படுத்தப்பட்டது. பாருங்கள் இன்று ஒருவர் சினிமா உருவாக்க வருகிறார் என்றால் அவர் திரைப்படங்களின் வழி உந்தப்பட்டு வருகிறார். எனது தலைமுறையின் தொடக்கம் வேறுமாதிரியாக இருந்தது. எனது திரைப்பட முயற்சிகளுக்கு ஆதாரமாக மூலமாக இருந்தது இலக்கியமே ஆகும். கவிதைகள், சிறுகதைகள் எழுதிய பின்னர் திரைப்படத்திற்கு முன்னேறி வந்தேன். எனவே என் ஆதாரமாக கொண்டுள்ள எழுதும் திறமை திரைப்பட உருவாக்கம் எனும் விளையாட்டில் முக்கியமானதாக உள்ளது.  சினிமா குறித்தும் தேடுதலை உடையவனாக இருக்கிறேன்.