மோடி மிகச்சிறந்த நிகழ்ச்சி மேலாளர் என்று கூறியது அத்வானிதான்; நானல்ல;

  மோடி மிகச்சிறந்த நிகழ்ச்சி மேலாளர் என்று கூறியது அத்வானிதான்; நானல்ல;

                                   - சீதாராம் யெச்சூரி












     ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்துக்களை இணைக்கும் புள்ளியாக உள்ள முக்கியமான தலைவரான சீதாராம் யெச்சூரி செயின்ட் 
ஸ்டீபன்ஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதார முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளவர் ஆவார். இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் சி.பி.ஐ. (எம்) கட்சியின் பொதுச்செயலாளராக பிரகாஷ் காரத்திற்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மோடியின் சாதனைகள் குறித்தும் உண்மையில் பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்குகின்றனவா என்பதைக் குறித்தும் விரிவாக நம்மிடையே உரையாடுகிறார்.

ஆங்கிலத்தில்: உஷினார் மஜூம்தார்

தமிழில்: அன்பரசு சண்முகம்

கடந்த 18 மாதங்களில் மோடி அரசின் செயல்பாடுகளை எப்படி மதிப்பிடுவீர்கள்?

மோடி அரசு தாராளமயமான எப்டிஐ வணிகம் மற்றும் வெளிநாட்டு மூலதனங்கள் மிக எளிதில் தடையில்லாமல் நம் நாட்டு இயற்கை வளங்கள் மற்றும் மலிவான தொழிலாளர் சக்திகளையும் பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்துவிட்டனர். இந்தியாவில் பன்னாட்டு முதலீடுகளுக்கான லாபம் அதிகப்படுத்தப்பட்டு காட்டப்பட்டாலும் கூட புதிய வேலை வாய்ப்புகளும் அல்லது புதிய முதலீடுகளோ கூட நமக்கு வந்து சேரவில்லை. உலகளவில் பொருட்களுக்கான தேவை இன்று இல்லை. மேலும் ஏற்றுமதிகளும் எதிர்பாராத வகையில் சரிந்துவருகிறது. மக்களுக்கு வாங்கும் சக்தி குறைந்துவிட்டதால் உள்நாட்டின் உற்பத்தித்துறை, தொழிற்சாலைகளின் வளர்ச்சி உயரவே இல்லை. எனவே சூழல் மோசமாகவே உளளது. 

ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குப்பிறகு பி.ஜே.பி. முந்தைய அரசின் பிரச்சனைகளை தீர்க்கவில்லை என்பது குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?

பி.ஜே.பி. ஆட்சிக்கு வரும்போது எண்ணெய் விலையானது மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில்  விலை விகிதம் இருந்தது. ஆனால் இப்போது அவர்கள் பெட்ரோல் மற்றும் டீசல்   அவை சார்ந்த பொருட்களின் விலையை  9 முறை உயர்த்தியுள்ளனர். இன்று தூய்மை இந்தியா வரி, செஸ் வரி ஆகியவற்றை திறன் மேம்பாடு, சாலை மேம்பாட்டு வரி மற்றும் கல்வி வரியோடு கூடுதலாக சேர்த்து உள்ளனர். செஸ் வரி என்பது மத்திய அரசுக்கான வருவாய் மூலமாகும். நடுத்தர வர்க்க மக்கள் புதிய கார்கள் தொலைக்காட்சிகள் வாங்குவதற்கு பணமில்லாத நிலையில் இதற்கான தேவை எங்கே இருக்கிறது? இச்சூழலில் எப்படி தொழில்துறை வளரும் ?

தற்போதையை தேசிய ஜனநாயக  கூட்டணி அரசு முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி -1 மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆகியவற்றை விட எவ்விதத்தில்  வேறுபட்டு உள்ளது?

மிகவும் மிதமிஞ்சிய தன்மையிலான முயற்சியாக உருவாக்கப்படும் தரவுகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இணக்கம் சம்மதம் என்பவை உருவாக்கப்படுகின்றன. ஹிட்லர் தனது தொழிற்சாலை திட்டங்களை அமல்படுத்தியபோது முன்பே தயாரிக்கப்பட்ட ஆரவாரக்குரல்களும், கைதட்டல்களும் இடையிடையே ஒலிக்கவிடப்பட்ட சம்பவத்தை மீள நினைவுபடுத்துகிறது பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி. நமது நாட்டில் இனக்குழுக்களிடையே ஒற்றுமை இல்லாததால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கர்வாப்ஸி, லவ் ஜிகாத், மாட்டிறைச்சி குறித்த தடைகள், உடை கட்டுப்பாடுகள் என கலாசார காவல் தன்மைகள் கொண்டதாய் நிகழும் சம்பவங்கள் வாஜ்பாய் காலத்தில் கூட நடந்ததில்லை. சில சம்பவங்களுக்கு முன்பு முயற்சிகள் நடைபெற்றாலும் இன்றுள்ளதைப் போல வெட்கமற்ற முறையில் அல்ல. 

எனவேதான் அத்வானி (அ) வாஜ்பாய் போன்றவர்கள் இவை போன்ற சக்திகளிலிருந்து மிகவும் தள்ளி இருந்தார்களா?

சுதந்திரப்போராட்டத்தின் போது உருவாகி வந்தவர்கள்தான் வாஜ்பாயும், அத்வானியும் ஆவர். அவர்களது தலைமை இயக்கமான ஆர்.எஸ்.எஸ். சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்கும் வரையில் அவர்கள் அதில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளாமல் தள்ளியே இருந்தனர். அவர்கள் பலரும் ஒன்றிணைந்து சுதந்திரப்போராட்டத்தில் போராடுவதைக் கண்டனர். இந்த உண்மையை இன்றைய தலைமுறை அறியமாட்டார்கள் என்பதால்தான் அலைஸ் இருக்கும் அதிசய உலகம் போல நாடு இருக்கிறது என்று கூறுகிறேன். 

அரசில் நேர்முறை முயற்சிகள் ஏதும் இல்லையா? சுத்தம் செய்யும் திட்டத்தின் தன்மையை இப்படி குறிப்பிடலாமா?

மோடி அறிவித்து திட்டங்கள் எவையும் புதியவை என்று கூறி விட முடியாது. சமூகத்தில் முன்பே செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளுக்கென புதிய பளபளப்பான அட்டைதான் அவர் அறிவிக்கும் திட்டங்கள் இது. இவை அனைத்தும் விளம்பரத்திற்கான முயற்சிகள்தான். அத்வானியே நரேந்திரமோடி மிகச்சிறந்த நிகழ்ச்சி மேலாளர் என்று கூறியுள்ளார். மோகன் தேசாய் எனும் திரைப்பட இயக்குநரிடம் அவரது வெற்றியின் ரகசியம் குறித்த கேட்டபோது, அவர் ‘‘பார்வையாளர்கள் திரையரங்கிற்கு உள்ளே நுழைவதிலிருந்து வெளியே செல்வது வரை நீங்கள் அவரை சிந்திக்க அனுமதிக்கக்கூடாது’’ என்று கூறுவார். திரு. மோடி இந்த முறையில்தான் திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக அறிவித்து மக்களை சிந்திக்க முடியாமல் செய்கிறார். 

பெரு நிறுவனங்களுக்கு பலனளிக்கும் ஜிஎஸ்டி மசோதாவை ஏன் விவாதிக்கத் தொடங்காமல் இருக்கிறார்கள்? பாராளுமன்றம் செயல்படாமல் எதிர்க்கட்சிகள் போராடுவதில் ஒரு நியாயம் இருப்பது போல் படுகிறதே?

பெருநிறுவனங்கள் மசோதாவிற்கு முழு ஆதரவு தருவதாக கூறியிருப்பார்கள். இதுபோன்ற ஆதரவை நாங்கள் இந்திய அரசியலில் கண்டதேயில்லை. ஆனால் எதுவும் நிகழவில்லையே! நான் பாராளுமன்றத்தில் இருக்கும்போது குஜராத் மாநில முதல்வராக இருந்த திரு. மோடி ஜி.எஸ்.டி. மசோதாவினை தடுத்தார். ஜி.எஸ்.டி. மசோதாவில் செய்ய வேண்டிய தீர்வுகள் எதனையும் செய்யாமல் பி.ஜே.பி. அரசு, எதிர்க்கட்சிகள் அம்மசோதாவினை தடுக்கின்றன என்று கூறிவருகிறது. 

மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் இம்மசோதா குறித்து எதிரணியில் இருந்தபோது அவர்கள் ஏற்படுத்திய உடன்பாட்டை இன்று எதிர்க்கட்சிகளிடத்தில் ஏற்படுத்துவதில் பி.ஜே.பி. தோல்வி கண்டிருக்கிறது. மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் அம்மசோதா குறித்து என்ன கூறினார்களோ அதையே இன்றும் தாங்கள் ஆட்சியில் இருக்கும்போதும் கூறி வருகிறார்கள் பி.ஜே.பியினர். 

இம்மசோதா குறித்து அனைத்துக்கட்சிக் கூட்டம் ஒன்றுகூட இதுவரை கூட்டப்படவில்லை. எதிர்க்கட்சியினருடன் கலந்துரையாடல் எங்கே நடந்தது? நிதியறிக்கை தயாரிப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் தொடங்கும் கலந்துரையாடல் தொடங்கியுள்ளது. இப்போது அரசு எதிர்க்கட்சிகள், வணிக சங்கங்கள், விவசாய அமைப்புகளை அழைத்து அவர்களது கருத்துக்களை கேட்டறிய வேண்டும். கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது மேலும் அப்போதுதான் பி.ஜே.பியினர் ஆட்சிக்கு வந்தார்கள் என்பதால் அவர்களின் செயல்பாடுகளின் தாமதத்தைப் பொறுத்துக்கொண்டோம். ஆனால் இந்த ஆண்டும் அதேபோல் எங்கள் வழி நெடுஞ்சாலை போன்றது என்ற கொள்கையைக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். 

அரசமைப்புச் சட்டம் தந்துள்ள உரிமைகள் குறித்து சுதந்திரம் குறித்தும் அவை பறி போவதின் இழப்பு குறித்தும் அதிகம் பேசுபவராக நீங்கள் இருக்கிறீர்கள்?

அரசு ஒவ்வொன்றையும் நிராகரிப்பதாக ஆலிசின் அற்புத உலகம் போல் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் நடைமுறை யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டமான ஹிந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்காக ஆக்ரோஷமாக செயல்பட்டு வருகிறார்கள். ஹிந்து தேசத்தை அமைக்க பின்தொடர முயலும்போது அரசமைப்புச் சட்டத்தின் படி மக்களுக்கு உறுதி மொழி அளித்த ஜாதிகளின் சார்பின்மை, மதக்கோட்பாடுகள், பாலினம் குறித்த பல கொள்கைகளையும் மறுக்கவேண்டிய நிலைமையாகிவிடும். தண்டனை குறித்த சிறு அச்சமுமின்றி அரசமைப்புச்சட்டத்தை அவர்கள் விலக்கித் தள்ளி செயல்பட்டு வருகிறார்கள். மோடி கலந்துகொண்ட முதல் பாராளுமன்ற கூட்டத்தில் அரசமைப்புச்சட்டத்தின்படி தாங்கள் வெறுப்பூட்டும் பேச்சுக்களின் மூலம் அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற கடமைக்கு உறுதியளிப்பீர்களா? என்று நாங்கள் கேட்டதற்கு, இன்றைய தேதி வரை பிரதமர் எந்த நம்பிக்கையான உறுதியையும் வழங்கவில்லை. 

உச்சநீதிமன்றமானது ஹரியானா அரசு பஞ்சாயத்து தேர்தலில் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமைக்கு கட்டுப்பாடுகள்  விதித்துள்ளதற்கு ஆதரவாக அல்லவா இருக்கிறது?

நமது அரசமைப்புச்சட்டம் அனைத்து இந்திய குடிமக்களும் வாக்களிக்கும் வயதிருந்தால் வேறு எந்த தகுதிகளையும் கருத்தில் கொள்ளாமல் அவர் வாக்களிக்கும் உரிமை பெறுகிறார். தேர்தலில் பங்கு பெற்று போட்டியிடவும், வாக்களிக்கவும் ஒவ்வொருவருக்கும் இதனை கொள்கையாக கடைபிடிக்க முடியும். உச்சநீதிமன்றம் ஹரியானா குறித்த வழக்கில் முடிவெடுக்கும் முன் அரசமைப்பு குழு அடங்கிய மேல்குழு ஒன்றும் நாடாளுமன்றமும் சட்டத்திருத்தம் செய்து ஒவ்வொரு இந்தியருக்கும் இதனை மாற்ற முடியாத உரிமையாக உறுதி செய்ய வேண்டும். 

சி.பி.ஐ.(எம்) சட்டம் இந்த மாத இறுதியில் நடக்கவிருக்கிறது. இதில் விவாதிப்பதற்கான முக்கியப் பிரச்சினையாக நீங்கள் அடையாளம் காண்பது என்ன?

சி.பி.ஐ.(எம்) தானாகவே இயங்கும் வகையில் அதன் பலத்தை அதிகரிக்கவேண்டிய தேவையிருக்கிறது. எங்களது தேர்தல் நிலைப்பாடு சார்ந்து மக்களிடையே எங்களுக்கு தனித்துவ பெயர் உள்ளது. இது இல்லாமல் நாங்கள் தேர்தலில் வெற்றி பெற முடியாது. தற்போதைய நிலைமையில் எங்களது செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது, கட்சியினை நிலைப்படுத்துவது குறித்து சிந்தித்து வருகிறோம். இந்திய மக்களோடு எவ்வாறு தொடர்புகளை வலுவாக்குவது என்பதே இக்கூட்டத்தில் பேசப்படும். 

பீகாரில் இடது முன்னணி மூன்றாவது அணியாக போட்டியிட்டது. போட்டியிட்ட இரு முக்கிய கட்சிகளான மகா கூட்டணி மற்றும் பி.ஜே.பி. என இரு கட்சியினரிடம் குறிப்பிட்ட தொலைவை பேணி வருகிறது.இது சரியான அணுகுமுறையா?

பீகாரில் பி.ஜே.பி. தோல்வியடைய இடதுசாரிகள் ஒரு காரணமாக அமைந்துள்ளனர். அரசியலை மக்கள் முன்பு இயற்கணிதம் போல கருதியிருந்தனர். 15 ஆண்டு ஆட்சியினால் லாலுவின் மீதும் 10 ஆண்டு ஆட்சியினால் நிதிஷ்குமார் மீதும் உருவாகி இருந்த வெறுப்பினால் கிடைத்த வாக்குகளை பி.ஜே.பி. அறுவடை செய்து வந்தது. அப்போது இங்கே இடதுசாரிகள் இல்லை. எனவே இந்த தேர்தலில் இடது முன்னணி முக்கியமான பாத்திரத்தை வகித்துள்ளது. 

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு முன்னான பரபரப்பு நுட்பமாக அதிகரித்து வருகிறது. சிங்கூர், நந்திகிராம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பிரச்சினைகள் அடுத்த ஆண்டு தேர்தலில் பிரதிபலிக்குமா?

உண்மையில் சிங்கூரில் உள்ள மக்கள் தொழிற்சாலையைத் திரும்ப கொண்டு வாருங்கள் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். தொழில்மயப்படுத்தலென்பது வரும்போது மேற்கு வங்க மக்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அப்போதிலிருந்து திரிணாமூலம் காங்கிரஸ் ஆட்சிதான் இருந்து வருகிறது. ஆனால் இங்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

இன்றுள்ள எதிரிடையான அரசியல் சூழ்நிலையில் சி.பி.ஐ (எம்) எப்படிப் பொருந்திப் போக முடியும்?

அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவில்லையெனில் எந்த வளர்ச்சியும் இங்கே சாத்தியமில்லை. மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் சிறுபான்மையினர் கோபத்தை சமாதானப்படுத்துவதும், பி.ஜே.பி. இந்து இனக்குழு வாதத்தை தொடர்ச்சியாகவும் திட்டமிட்டும் ஏற்படுத்தி வருகிறது. சிறுபான்மையினர் நம்பிக்கை மற்றும் ஹிந்து இனக்குழுவாதம் என் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று உணவளிக்கிறது. இந்த முறையில் வங்கத்தில் பி.ஜே.பியும், திரிணாமூல் காங்கிரசும் உடனிசைவாக செயல்பட்டு மோசடியாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது உண்மையில் மக்கள்தான். சாரதா நிதிநிறுவன ஊழல் வழக்கில் பி.ஜே.பி. நிதானமாக செயல்பட வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரசும், திரிணாமூல் காங்கிரசின் உதவி நாடாளுமன்றத்தில் கிடைத்தால் புதிய மசோதாக்களை எளிதில் பி.ஜே.பி. நிறைவேற்றிவிட முடியும் என்று பி.ஜே.பி எண்ணி வருகின்றன. இன்று மேற்கு வங்க மக்கள் இந்த யதார்த்த நிகழ்வுகளைத்தான் கண்டு வருகிறார்கள்.
நன்றி: அவுட்லுக், 28, 2015